விமர்சனமும் விளக்கமும்

அன்பார்ந்த சகோதரர்களே...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..

 

புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் சம்மந்தமாகவும் ஏகத்துவ கொள்கை சம்மந்தமாகவும் நம் மக்கள் மத்தியில் இருக்கும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும் முகமாக இந்த பகுதி நம் இணையதளத்தில் துவக்கப்பட்டுள்ளது. உங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் நீங்கள் இந்தப் பகுதியில் பதிவு செய்யலாம். அதற்கான விளக்கம் அல்லது பதில் இந்த பகுதியிலேயே வழங்கப்படும்.

 

கேள்வி கேட்பவர்கள் அல்லது விமர்சிப்பவர்கள் தங்களது பெயரை தெறிவிக்கவேண்டும். மேலும் கேள்வி மற்றும் விமர்சன நடை கண்ணியமான முறையில் அமைந்திருத்தல் வேண்டும் தவறாக வார்த்தை பிரயோகங்கள் இருந்தால் அந்த கருத்து தளத்தில் இருந்து நீக்கப்படும்.

ஏகத்துவம் / TNTJ PVS

Date: 17/07/2012

By: Mohamed Imthiyas

Subject: Puduvalasai thawheed valarchi?

assalamu alaikum...

namathu vooril thaniyaaha sariyana muraiyil tholuhai nadatha palli kattiyathilirinthu thavara kolhai ulla namathoor sahothara sahotharikalai meetu edupatharku nadathappatta muyarchikalai pattiyal ida mudiyuma? athil evvalavu vetri kondullom enbathai solla mudiyuma?

verum tholugai mudinthapin markashil vukanthu pesuvathai thavira pothu makkal mathiyil evalavu thooram eehathuvathai naam kondu sendru irukirom?

Date: 04/05/2012

By: sulaiman

Subject: days

kadalar dinam,annaiyar thinam,innum ethanaiyo thinanghal islamiyarhalal kondada paduvathillai.anal vellikelamai thinathai mattum serappu valepadahavum athai oru srappu thinamahavum kondullerhalei.en intha muranpadu. enru matru matha nanbar ketkerar.velakam tharavum?.

Date: 30/05/2012

By: வெள்ளிக்கிழமை சிறப்புடைய நாளே....

Subject: Re: days

தினங்கள்

உலகில் கொண்டாடப்படும் தினங்களுக்கும் வெள்ளிக் கிழமையை முஸ்லீம்கள் கொண்டாடுவதற்கும் அடிப்படையில் பெரிய வேறுபாடு உள்ளது. இந்தியாவில் நேரு பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். வாலன்டைன் என்ற ஒரு கிருத்தவ பாதிரியாரின் நினைவால் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கும் வெள்ளிக்கிழமை நாளும்கும் எள் அளவும் ஒற்றுமை கிடையாது.

இது அல்லாஹ் தேர்வு செய்து தந்திருக்கும் நாள் மார்க்க அடிப்படையுடைய ஒரு முக்கியமான வணக்க வழிபாட்டைக் கொண்ட நாள். இது மற்றநாட்களைப் போல் இல்லை இதை முதலில் நீங்கள் உஙகள் நண்பருக்கு தெளிவு படுத்த வேண்டும்.

இரண்டாவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்

”இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப் பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல்கள் : புகாரி 3486, முஸ்லிம் 141

”சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி 450

Date: 05/02/2012

By: sulaiman

Subject: delay answer

kelvi ketpavarku pathil udanei tarapaduvatillai ein?

Date: 13/03/2012

By: Editor

Subject: Re: delay answer

சகோதரர் சுலைமான் அவர்களுக்கு, சில தவிற்க முடியாத காரணங்களால் தாமதமாகிவிட்டது.

பிறை பார்க்கும் படி நபிகள் நாயகம் சொன்ன காரணத்தால் பார்க்க வேண்டும்

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறு கையில் ரமளான் பிறையைக் காணாத வரை நோன்பு நோற்காதீர்கள் (மறு) பிறையைக் காணாத வரை நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால் அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக் கிட்டுக்கொள்ளுங்கள். என்று கூறினார்கள்.

நூல் முஸ்லீம் 1958

இந்தப் பகுதியை விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்க துவக்கப்பட்டுள்ளது. கேள்விகள் எதுவும் இருந்தால் எனக்கு மெயில் அனுப்புங்கள்.

Date: 05/02/2012

By: sulaiman

Subject: pirai sambantamaga?

piraiai parpatin karanam enna?.islatirkum,peraikum enna thodarbu?.pirai parthu oru visayathai edutu nadapathu, 21 centureil saathyama?.pls vibaramaha taravum.

Date: 04/01/2012

By: sulaiman sait

Subject: Regarding Eid Prayer

Eid Al Fitr is been observed in Countries different dates, In one country specially in India in one state itself our people are observing different dates, Why this different dates(for ex. today is observed in Saudi mean next day observed in India)? Other religion brothers are asking you are all following Saudi Arabia's instruction in many issues, why cant you people around the world observe Eid Al Fitir one same date? Why cant you all observe when Saudi Arabia is observing date?

Your valuable answer will fulfill the brothers please....


Date: 05/02/2012

By: Editor

Subject: Re: Regarding Eid Prayer

பிறையை அடிப்படையாகக் கொண்டே நாம் பெருநாள் கொண்டாடுகிறோம். பிறை விசயத்தில் பலரும் பல கருத்துக் கொண்டுள்ளதால் இது போல் நடக்கிறது. ஆனாலும் பிறையை பார்ப்பது என்பது ஒரு சட்டமாக இருக்கின்ற காரணத்தால் யார் பார்கிறாரோ அவர் பெருநாள் கொண்டாலாம். பார்க்காதவர் மருநாள் கொண்டாட வேண்டும்.

Date: 18/11/2011

By: sulaiman sait

Subject: bothai palakam

pugai, madu ,cinema ivai anaithaiyum seithu kondei tholugavum seikrargal ivarhalai patre islam enna solhiradu?

Date: 26/11/2011

By: sulaiman sait

Subject: Re: bothai palakam

pugai, madu ,cinema ivai anaithaiyum seithu kondei tholugavum seikrargal ivarhalai patre islam enna solhiradu?

1 | 2 >>

New comment