கருத்துக்கள்

அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே!

புதுவலசை.இன் என்ற இந்த இணையத்தளம் சம்மந்தமான கருத்துக்களை வரவேற்கிறோம், ஆக்கப்பூர்வமான முறையில் அனுப்பித்தருங்கள். உங்களில் கருத்துக்கள் இந்த இணையத்தளத்தில் சேவையையும் பொலிவையும் அதிகப்படுத்த உதவியாக இருக்கும்  இன்ஷா அல்லாஹ்.

 

இணையதளப் பயன்பாட்டாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நமதூர் மக்களுக்கு நமதூர் செய்திகளையும் உலகநடப்புகளையும் நம்மால் முடிந்தவரை இந்த இணையதளம் மூலமாக வழங்கிவருகிறோம். ஆனால் சிலர் அதை காப்பி எடுத்து தமது பெயரை போட்டுக் கொள்கின்றனர். செய்தி மக்களுக்கு செல்லவேண்டும் என்பது தான் நமது நோக்கம் மலிவான விளம்பரம் தேடுவது அறுவருக்கத்தக்க செயலாகும். செய்திகளை காப்பி எடுத்து அதை அப்படியே வெளியிட்டாலும் பரவா இல்லை அதில் தமது பெயரைப் போட்டு வெளியிடுகின்றனர். காப்பி எடுப்பவர்கள் புதுவலசை.இன் முகவரியை அந்த செய்தியின் கீழ் போடவேண்டும் அதுதான் மரபு. அல்லது எதுவும் போடாமல் ஈமெயில் மூலம் வெளியிடவேண்டும்.

இது இஸ்லாம் தடுத்துள்ள செயலாகும்.

 

3:188   لَا تَحْسَبَنَّ الَّذِينَ يَفْرَحُونَ بِمَا أَتَوا وَّيُحِبُّونَ أَن يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلُوا فَلَا تَحْسَبَنَّهُم بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ  ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
 
எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.

Feedback

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

புதுவலசை ஜமாஅத் இணையதளம்

01/07/2010

அன்பார்ந்த நண்பர்களே! கடந்த நான்காண்டுகளாக புதுவலசை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிச் செய்திகளை உலகம் முழுவதும் இருக்கும் நண்பர்களுக்காக இணையதளத்தின் மூலம் கொண்டு சென்றதின் பயனாக இந்த இணையதளத்திற்க்கு மக்களின் ஆதரவு பெருமளவு பெருகியுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...

புதுவலசை ஜமாஅத் இணையதளம் கடந்த காலங்களில் இலவச இணையதளமாத்தான் செயல்பட்டுவந்தது. அல்லாஹ்வுடைய மாபெரும் கருணையாலும் அவனுடைய உதவியாலும் முதிர்ச்சியடைந்து இனி புதுவலசை.இன் என்ற முகவரியில் செயல்படும்.

தொடர்ந்து உங்களுடைய ஆதரவையும் ஆக்கங்களையும் எமக்கு அனுப்பித் தாருங்கள், ஊரிலும் மற்ற பகுதியிலும் இணையதள தொடர்புடைய நம் சகோதரர்கள் உங்களால் முடிந்தால் நமதூர் செய்திகளையும் அல்லது நம் பகுதி மற்றும் நமதூர் சார்ந்த மற்ற வெளிநாட்டு செய்திகளையும் எமக்கு புகைப்படத்துடன் அனுப்பித் தாருங்கள். அந்த செய்திகள் உடனே இணையத்தில் வெளியிடப்படும்.

நமது நோக்கம்

புதுவலசை ஜமாஅத் இணையதளம் உள்ளுர் நிகழ்வுகள் மட்டுமல்லாமல் சமுதாய செய்திகளையும், சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறது. நம்முடைய செய்தியை அல்லது வேண்டுகோளை நம்பி மக்கள் உதவவும் செய்கிறார்கள். இதுபோன்ற காரியங்களை இந்த இணையதளம் நோக்கமாகவே கொண்டு செயல்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்யும் நல் உள்ளங்களையும் இணைப்பதில் இந்த இணையதளம் வெற்றியும் கண்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்....

இதுபோன்ற தேவைகளுக்கு உதவிசெய்யும்  மக்களுக்கு இந்த இணையதளம் கடமைப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவை ஏற்படுத்துவானாக...

இது போன்ற பணிகள் மென்மேலும் தொடர ஏக இறைவனை பிரார்திக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.