அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வௌயில் நீந்து கின்றன. (Al - Quran 21:33)
நமது பூமியில் இருந்து 149 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் `எச்.டி. 188753′ என்ற நட்சத்திரத்தை வியாழன் போன்ற ஒரு ராட்சத வாயுக்கோள கிரகம் மிக நெருக்கமாக மூன்றரை நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.
இந்தக் கிரகம் சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தைக் காட்டிலும் இருபது மடங்கு குறைவான தூரத்தில் அதன் நட்சத்திரத்தை வலம் வந்துகொண்டிருக்
கிறது. இந்தக் கிரகம் வலம் வந்துகொண்டிருக்கும் மைய நட்சத்திரத்தை, வேறு ஒரு ஜோடி நட்சத்திரங்கள் சுற்றுகின்றன.
இதில் அதிசயம் என்னவென்றால், அந்த இரு நட்சத்திரங்களும் ஒன்றையொன்று 156 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இந்த இரட்டை நட்சத்திரங்கள், சூரியனை சனி- யுரேனஸ் கிரகங்கள் சுற்றிவரும் தொலைவில் அந்த மைய நட்சத்திரத்தை 25.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுகின்றன.
இந்தக் கிரக அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் `விண்வெளி சர்க்கஸ்’ என்று அழைக்கின்றனர். மேலும், இந்த மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறு நிறமாக இருக்கின்றன. பிரதான நட்சத்திரம் மஞ்சள் நிறத்திலும், தொலைவில் வலம் வந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்திலும் இருக்கின்றன.
எனவே இந்த வாயுக்கோள கிரகத்தின் சந்திரனில் இருந்து பார்ப்போருக்கு வானில் அதிசயக் காட்சியாக மூன்று சூரியன்கள் தெரியும். மேலும் மூன்று சூரியன்
களும் மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என்று வெவ்வேறு நிறங்களில் இருப்பதால் வானம் வர்ணஜாலமாகக் காட்சிஅளிக்கும்.
தினமும் மூன்றுமுறை சூரிய உதயங்களும், அஸ்தமனங்களும் நிகழும். அதைப் போல வெப்பமும் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.