அகிம்சை எங்கள் கொள்கை: ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் (2010 மெகா காமெடி)

11/11/2010 21:09


ஆர்எஸ்எஸ் என்பதும் வன்முறை என்பதும் எதிர்ச்சொல் ஆகும். அகிம்சை எங்கள் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. இது எப்போதும் மாறாதது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
 

அஜ்மீர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் யாரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்ல. கைது செய்யப்பட்டுள்ள இந்திரேஷ் குமார் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அவரது பெயரே வேண்டுமென்ற வழக்கில் சேர்த்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.


இந்துக்களை களங்கப்படுத்தும் வகையில் 2003ம் ஆண்டு முதல் இந்து மதத் துறவிகளுக்கு எதிராக சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தேவையில்லாமல் சர்ச்சைக்குள்ளாக்கி வருகின்றனர். எனவே, தற்போது சிக்கல் என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்து மதத்துக்கும் தான்.


ஆர்எஸ்எஸ் என்பதும் வன்முறை என்பதும் எதிர்ச்சொல் ஆகும். அகிம்சை எங்கள் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. இது எப்போதும் மாறாதது என்றார்

நக்கீரன்