அங்கோலா ராணுவத்தினரால் காங்கோ பெண்கள் 700 பேர் கற்பழிப்பு

07/11/2010 15:06

ஆப்பிரிக்க கண்டத்தில் காங்கோ மற்றும் அங்கோலா நாடுகள் உள்ளன. காங்கோ நாட்டின் கனிமவள சுரங்கங்கள் அங்கோலாவின் எல்லையில் உள்ளன.
 
இங்கு காங்கோ நாட்டு பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் நாட்டுக்குள் புகுந்து விட்டதாக கூறி அவர்களை அங்கோலா ராணுவத்தினர் கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகின்றனர்.
 
அவ்வாறு சிறையில் அடைக்கப்படும் பெண்கள் அங்கோலா ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்படுவதாக ஐ.நா. அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கோலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 30 பெண்கள் கூட்டாக கற்பழிக்கப்பட்டு நிர்வாண நிலையில் காங்கோ நாட்டு எல்லையில் வீசப்பட்டதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதைத்தொடர்ந்து ஐ.நா.சபையன் மனித உரிமை ஏஜென்சி விசாரணை நடத்தியது. விசாரணையில் காங்கோவை சேர்ந்த 700 பெண்கள் கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த தகவலை இந்நிறு வனத்தின் செய்தி தொடர்பாளர் மவுரிஷியோ குலியானா தெரிவித்துள்ளார். இச்சம்பவங்கள் குறித்து 2 நாடுகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

maalaimalar.com