அணு செறிவூட்டும் பணியை ஈரான் நிறுத்தியது

25/11/2010 09:49

 

 ஈரான் நாடு அணுகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. எனினும், அணுகுண்டு தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் தொடர்ந்து செய்து வந்தது. இந்த நிலையில், யுரேனியம் செறிவூட்டும் பணியை தற்காலிகமாக ஈரான் நிறுத்தி இருக்கிறது. இந்த தகவலை, ஐ.நா. சபையின் அணு கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சர்வதேச அணுசக்தி ஏஜென்சி அளித்துள்ள நம்பகமான தகவலின் அடிப்படையில் இந்த அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இந்த மாதம் தொடக்கத்திலேயே செறிவூட்டும் பணியை ஈரான் நிறுத்திய போதிலும், ஏற்கனவே 3.18 டன் யுரேனியத்தை செறிவுபடுத்தி வைத்துள்ளது. இதைக் கொண்டு இரண்டு அணு குண்டுகளை தயாரிக்கலாம்.

dailythanthi.com