அமீரகத்தின் 39வது தேசிய தினம் உற்சாக கொண்டாட்டம்

03/12/2010 12:28

அமீரகத்தின் 39வது தேசிய தினம் இன்று ஐக்கிய அரபு அமீர்கத் தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, ஃபுஜைரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சிறப்புற கொண்டாடப்பட்டது.

அமீரக்த்தின் பல்வேறு நினைவலைகளை விவரிக்கும் வண்ணம் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமீரகத்தின் தேசிய தினத்தினையொட்டி விடுமுறையாதலால் பூங்காக்கள் அனைத்தும் பல்வேறு நாட்டவர்களால் நிரம்பி வழிந்தன. பல்வேறு இந்திய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவரும் இவ்விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்.

துபாய் தமிழ்ச் சங்கம் கொண்டாட்டம்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தையொட்டி இன்று ஷார்ஜாவில் சிறப்பு நிகழ்சசிக்கு துபாய் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் 39வது தேசிய தினத்தை துபாய் தமிழ்ச்சங்கம் சிறப்பாக கொண்டாடுகிறது. ஷார்ஜா ஸ்டார் இன்டர்நேஷனல் ஸ்கூலில் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

இது குறித்து துபாய் தமிழ்ச் சங்கத்தின் தலைவி ஜெயந்தி சுரேஷ் கூறுகையி்ல், இந்த தேசிய தின சிறப்பு நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மேலும், தீபாவளியை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றது என்றார்.

இந்நிகழ்ச்சி குறித்த விபரங்கள் அறிய விரும்புபவர்கள் துபாய் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன் அவர்களை 050 5787657 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். oneindia.in