அமெரிக்காவை சேர்ந்த போல்டன் ஈரான் அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலை தூண்டும் விதமாக பேச்சு!

19/08/2010 09:19

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் அமெரிக்கா பிரதிநிதியான போல்டன் கடந்த 17ம் தேதி வாசிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் பொழுது. ஈரானின் அணுஆயுத செரிவுட்டலுக்கு எதிராக இஸ்ரேலின் நடவடிக்கை தாமதமானது என்றும், இன்னும் 8 நாட்களில் ஈரானின் போசர் அணுமின் நிலையத்தை தாக்க வேண்டும் என்றும், இல்லை எனில் அதற்க்கு பிந்தைய தாக்குதல் ஈரானின் பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் எனவும் கூறியிருப்பது மத்திய கிழக்கு பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Israel has '8 days' to hit Iran nuclear site: Boltonவரும் 21ம் தேதி ரஸ்யாவின் உதவியுடன் தனது முதல் அணு எறிபொருட்களை ஈரான் அணுஉலையில் இருந்து வெளிக் கொண்டுவரத்  திட்டமிட்டுள்ளது. இந்த செய்தியை ஈரான் வெளியிட்ட உடனேயே போல்டன் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் ஈரான் அணு ஆயுதநாடாக உருவெடுக்கும் பட்சத்தில் அது மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ஒரே எதிரியாகவும் அகில உலக அளவில் அமெரிக்காவின் எதிரியாகவும் மாறும் எனவும் கூறியுள்ளார்.

இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளித்த ஈரானின் வெளியுறவுத்துறை செய்தியாளர் ரமின் மெஹ்மன்பராஸ் (Ramin Mehmanparast) செவ்வாய் கிழமை கூறுகையில், நிர்மானிக்கப்பட்ட எந்த எறிசகதி உலைமீதும் தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டத்திற்க்கு எதிரானது என்றும், அது பொதுமக்களை பாதிக்கும் எனவும் தெறிவித்தார். மேலும் போசர் அனுமின் நிலையத்தை எத்தாககுதலில் இருந்தும் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது என அவர் தெறிவித்தார்.

https://news.yahoo.com/s/afp/20100817/pl_afp/irannuclearpoliticsisraelusmilitary