அரபியப்பா மௌலூது - இமாம் ஜமாஅத்தை தவ்ஹீத் ஜமாஅத் புறக்கணிப்பு

01/02/2009 09:52

 

1.2.2009

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நமதூரில் கடந்த வருடம் ஸபர் மாதம் நடந்த அரபியப்பா மௌலூது வழாவிற்க்குப் பிறகு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையை யாவரும் அறிவீர்கள். இமாம் ஜமாமததை பின்பற்றி தொழாமல் தனி ஜமாஅத் என்ற முடிவெடுத்து தனி ஜும்ஆ வரை சென்று பின் அன்றைய முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் மூலம் விவாதம் நடத்தி அவர்கள் தந்த வாக்குறுதியின் அடிப்படையில் மீண்டும் இமாம் ஜமாஅத்தை பின் தொடர்ந்து தொழுது வந்தோம்.

இந்நிலையில் கடந்த 27.1.2009 அன்று முஸ்லிம் தர்ம பரிபாலன சபைக்கு இது சம்பந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. அதில் இன்னும் சில தினங்களில் ஸபர் பிறை பிறக்க இருப்பதால் மீண்டும் பழைய நிலை போல் மௌலூது விழாக்கள் நீடிக்காமல் தடுக்க வேண்டுமாய் கோரியிருந்தோம்.

அந்தக் கடிதம் முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் தலைவர் சகோ. முஹம்மது மைதீன் மற்றும் செயலர் சகோ. அப்துல் காதர் ஆகியோர் தலைமையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் 28.1.2009 அன்று மாலை படிக்கப்பட்டது. பின் சுன்னத்வல் ஜமாஅத்தின் கொள்கையின் அடிப்படையில் அவர்கள் செய்து வருவதாகவும் வழிவழியாகச் நடந்து வருவதாகவும் சொல்லி யாருக்காகவும் அதை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

சுன்னத்வல் ஜமாஅத் இமாம்களான ஷாஃபியோ ஹனபியோ இதுபோன்று தர்ஹாக்கள் கட்டி விழா நடத்தவும் அரபியில் மௌலூது பாட்டு எழுதிப் பாடவும் அனுமதித்துள்ளார்களா? என்று தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் கேள்வி எழுப்பப் பட்டது. ஆனால் அதைப்பற்றி கருத்தில் கொள்ளாமல் மறுத்து விட்டனர்.

ஆகையால் தவ்ஹத் ஜமாஅத் சார்பில் தற்ப்போது இமாம் ஜமாஅத்தை புறக்கணிப்பது என்றும் முடிந்தால் தனியாக ஜும்ஆ நடத்துவது என்றும் தீர்மாணித்துள்ளோம்.