ஆதர்ஸ் ஊழல்:அசோக்சவான் ராஜினாமா ஏற்பு

09/11/2010 15:27

ஆதர்ஸ் ஊழல்:அசோக்சவான் ராஜினாமா ஏற்பு
 

 


மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான்,  கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தாருக்கு ஒதுக்கப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் தனக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 ஊழல் குற்றச்சாட்டை தொடர்ந்து  அசோக்சவான், தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கொடுத்திருந்தார்.

 

ராஜினாமா கடிதத்தின் மீதான முடிவு அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்குகிறது.

 

 

 கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே அசோக்சவான் பதவி மீதான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்,   அசோக்சவான் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அசோக்சவான் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நிலுவையில் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

nakkheeran.in