ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும்: காங்கிரஸ்

17/11/2010 20:32

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என, இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் மோகன்காந்தி கூறியுள்ளார்.
 

 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டை அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வழி நடத்துபவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. மக்களுக்காகத்தான் சட்டம் என்பதை உணர்ந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்டு வந்தார்.


வகுப்பு வாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மதவெறி மூலம் மக்களை பிரித்தாள நினைக்கிறது. சோனியா காந்தியை பற்றிய தரம் தாழ்ந்த விமர்சனத்தால் அந்த அமைப்பே வெட்கி தலை குனிந்துள்ளது. இந்த அமைப்பை உடனடியாக மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

nakkheeran.in