இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் இளம் அரசியல் தலைவர்களில் ஒரு முஸ்லிமுக்கு வாய்ப்பு

11/11/2010 20:14

அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்து சென்றதை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவுகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.
 
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சார்பில் இந்தியாவில் உள்ள இளம் அரசியல் தலைவர்கள் 10 பேரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கும்படி அகில இந்திய கட்சி தலைவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 
அதன்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பேரும், பா.ஜனதா கட்சியை சேர்ந்த 4 பேரும், முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஒருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.