இந்தியாவில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது - ஆய்வு சொல்கிறது

07/11/2010 15:26

இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது என்று ஐ.நா.வின் ஓர் அமைப்பு எச்சரிக்கிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையின்  மனிதவள மேம்பாட்டு திட்டப் பிரிவு, (யுனைடெட் நேஷன்ஸ் டெவலப்மென்ட் புரோக்ராம்) ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளைக் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தயாரித்து வெளியிடுகிறது. ஏழையும் அல்லாமல் பணக்கார நாடாகவும் இல்லாமல் இருக்கும் நாடுகளிடையே பொருளாதார ரீதியிலும் மனித வள மேம்பாட்டு அளவிலும் இந்தியா கடந்த 2009 ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு முன்னேறியுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதே சமயம் பொருளாதார ரீதியில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 

தெற்காசிய நாடுகளிடையே, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்ற குறியீட்டில் இந்தியா முதல் பத்து நாடுகளிடையே இடம் பெற்றுள்ளது. 2009-ம் ஆண்டு நடுத்தர ரக நாடுகளிடையே மனித வள மேம்பாட்டுக் குறியீட்டுப் பட்டியலில் 128-ம் இடத்தில் இருந்தது இந்தியா. இவ்வாண்டு 119-ம் இடத்துக்கு வந்துள்ளது. ஐ.நா. அமைப்பின் இந்தியப் பிரதிநிதி பட்ரீஸ் கூர்-பிúஸô இந்த ஆய்வறிக்கையை புது தில்லியில் வெளியிட்டார். மத்திய திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சயீதா ஹமீது மற்றும் மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், கெüசிக் பாசு முன்னிலையில் இவ்வெளியீட்டு விழா நடந்தது.

 

"கடந்த இருபது வருடங்களாகவே இந்தப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. தெற்காசிய நாடுகளை நோக்கும்போது இந்திய முன்னேற்றத்தின் வேகம் சராசரியைவிட அதிகம்தான். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் அபாரமாக உள்ளது. ஆனால் பொருளாதார ரீதியில் ஏற்றத்தாழ்வும் அதிகரித்து வருகிறது. மனித வள மேம்பாட்டுக் குறியீட்டளவில் இதைப் பொருத்திப் பார்த்துக் கணக்கிடுகையில் தேசிய மனிதவள மதிப்பில் முப்பது சதவீதம் இழப்பு அடைகிறது இந்தியா,' என்றார் பட்ரீஸ் கூர்-பிúஸô.

 

இந்த ஆய்வை தாம் வரவேற்பதாகக் கூறிய கெüசிக் பாசு, "இந்த அறிக்கையின் ஒரு பகுதி இந்தியாவைப் பாராட்டும் விதமாகவும் மறு பகுதி இந்தியப் பொருளாதாரப் போக்கை விமர்சிப்பதாகவும் உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் நம் நாட்டின் முன்னேற்றம் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் மனித வள முன்னேற்றத்தைப் பொறுத்த அளவில் நம்மைப் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாடு பின் தங்கியுள்ளது' என்று ஒப்புக் கொண்டார் அவர்.

தினமணி