இந்தியாவில் செல்போன் பயன்படுத்துகிறவர்கள் 70 கோடி: கழிவறையை பயன்படுத்துகிறவர்கள் 36 கோடி

22/11/2010 14:53

இந்தியாவில் செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 70 கோடி. ஆனால், தங்களுக்கென்று தனிக்கழிவறையை பயன்படுத்துகிறவர்கள் எண்ணிக்கை 36 கோடியே 60 லட்சம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று ஐ.நா. சபை வெளியிட்டுள்ளதாக, சுலாப்' சுகாதார அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் தெரிவித்துள்ளார்.
 

 


டெல்லியில் நடந்த உலக கழிவறை தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சுலாப்' சுகாதார அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் மேலும் கூறுகையில்,


இந்தியா தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஐ.நா. சபையின் புள்ளி விவரம் காட்டுகிறது. நகர்ப்புறங்களில் கழிவறை இல்லாத வீடுகளின் எண்ணிக்கை 19 சதவீதம். இது கிராமப் புறங்களில் 66 சதவீதமாகும். 1992 93ம் ஆண்டு 70 சதவீதமாக இருந்த கழிப்பறை இல்லாத வீடுகளின் எண்ணிக்கை 2007 08ல் 51 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், இந்த முன்னேற்றம் மிக மெதுவாக நிகழ்ந்துள்ளது.


பாதுகாப்பற்ற அல்லது அசுத்தமான குடி தண்ணீரை பயன்படுத்துவதாலேயே இந்தியாவில் நோய் தொற்றும், குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. போதுமான சுகாதார வசதிகள் இருந்தால்தான் தொற்று நோய்களை தடுக்க முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசின் கொள்கைகளில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று கூறினார்.
 Nakkheeran.in