இந்துக்களை ஆர்.எஸ்.எஸ். ஏமாற்றிவிட்டதாக இந்து மகாசபா குற்றம்சாற்றியுள்ளது.

02/11/2010 12:47

 

இந்துக்களை ஆர்.எஸ்.எஸ். ஏமாற்றிவிட்டதாக இந்து மகாசபா குற்றம்சாற்றியுள்ளது.

ஜலந்தரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த இந்து மகாசபாவின் பேச்சாளர் ஜே.பி. ஷைத்ரியா, செல்வத்தை குவித்துக்கொள்வதற்காகவே அயோத்தியில் ராமர் கோவில் இடத்தை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். எண்ணுவதாக குற்றம்சாற்றினார்.

இந்துக்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள், ஆர்.எஸ்.எஸ். ஆல் உருவாக்கப்பட்டதுதான் என்றும் குற்றம் சாற்றிய அவர், தொடக்கம் முதலே இந்துக்களின் நலம் விரும்பியாக ஆர்.எஸ்.எஸ் நடித்து மட்டுமே வந்ததாகவும், இந்துக்களுக்கு நியாயமாக அது நடந்துகொள்ளவில்லை என்றும், அவர்களை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார்.

webdunia.com