இஸ்லாமிய வங்கிமுறையை நடைமுறைப்படுத்த மலேசியாவின் வழிகாட்டுதல் தேவை என மன்மோன் சிங் தெறிவித்துள்ளார்
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மலேசியா நாட்டின் சுற்றுப்பயனத்தில் இருக்கிறார். பாதுகாப்பு, பொருளாதாரம் மேம்பாடு மற்றும் வணிக தொடர்புகளை அதிகப்படுத்த பல்வேறு ஒப்பந்தங்களை இருநாடுகளும் வகுத்து வருகிறது.
இன்று பேசிய மன்மோகன் சிங் வட்டியில்லா வங்கிமுறையின் அரசனாகத் திகழும் இஸ்லாமிய வங்கிய முறையை இந்தியாவிலும் நடைமுறைப் படுத்துவதற்க்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கபட்டுவருவதாகவும். இந்திய ரிசர்வ் வங்கி்க்கு இதுதொடர்பான தெளிவான வழிகாட்டுதலை அளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இந்திய அரசு இருப்பதாகவும் தெறிவித்தார்.
மேலும் இஸ்லாமிய வங்கித் திட்டத்தை மலேசிய அரசும் மலேசிய வங்கிகளும் செயல்படுத்தி வரும் நடைமுறைகளை இந்தியா கவனித்து வருவதாகவும் மேலும் சில நடைமுறைகள் பற்றி கற்றுக் கொள்ளவேணடியுள்ளது எனவும் தெறிவித்தார்.
இஸ்லாமிய வங்கித் திட்டம் துவங்கப்பட்டால் மேற்காசியாவில் இருந்து அதிக முதலீடுகள் வரும் என எதிர்பார்ப்பதாகவும், இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சிவிகிதம் 2010 கனிசமான முன்னெற்றத்தை எட்டும் எனவும் தி எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.