ஈரான் மீது தாக்குதல் நடத்த வழியுறுத்திய அரபுநாடுகள் - விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்

29/11/2010 15:40

விக்கிலீக்ஸ் தற்ப்போது வெளியிட்ட 250,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் பற்றி உலகமே பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், சவுதி மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட அரபுநாடுகள் ஈரான் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமாய் அமெரிக்காவை வழியுறுத்தியதாகக் கூறும் அமெரிக்க ஆவணத்தையும் வெளியிட்டுள்ளது.

ஈரானின் அணுஆயுத திட்டத்திற்க்கு அரபு நாடுகளுக்கு மத்தியில் அதிர்ப்தி நிலவிவந்தது. ஈரானின் அந்த நடவடிக்கையை தொடர்ந்து, பல்வேறு அரபுநாடுகள் அணுஆயுத நாடாக மாற நடவடிக்கை எடுத்தும் வருகிறது. இதற்க்கு முந்திய வரலாற்றுக் காரணங்களும் ஈரான் மற்றும் மற்ற அரபுநாடுகளுக்கு மத்தில் உள்ள பிரச்சனையை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

”கடந்த ஈரான் ஈராக் போர் விவகாரத்தை துவக்கியதே அரபுநாடுகள் தான் என்ற ஒரு கருத்தும் நிலவிவருகிறது. ஈரானின் வளர்சியை கட்டுப்படுத்த அரபுநாடுகள் அமெரிக்காவிடம் முறையிட்டதாகவும் அதற்க்கு ஏராளமான பொருளாதாரத்தை அரபுநாடுகள் செலவளித்தாகவும் தகவல்கள் தெறிவிக்கின்றன. அந்த போருக்கு அரபு நாடுகளுக்காக அமெரிக்கா ஈராக் பிரதமர் சதாம்உசேனைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அத்தகவல் தெறிவிக்கிறது. இந்நிலையில் குவைத் ஈராக்கை ஆக்கிரமிப்புச் செய்ததால் சதாமின் பார்வை வளைகுடா நாடுகளின் பக்கம் திரும்பியது நினைவிருக்கலாம். அதன் பின்தான் அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையே பிரச்சனை துவங்கியது.

அதன்பின் ஈராக் மறுசீரமைப்புப் பணியில் ஈரான் தலையிடுவதை எதிர்த்தது அரபுநாடுகள். அமெரிக்கா ஈரானை தாக்கினால் அதற்க்கு குவைத்தை இராணுவ தளமாக அமெரிக்கா பயன்படுத்தக் கூடும் என கருதிய ஈரான், தங்கள் மீது தாக்க நினைத்தல் சுற்றியுள்ள அனைவரையும் தாக்குவோம் என எச்சரித்ததும், அரேபிய வளைகுடாவையே கடல் வழியாக பயனிக்க முடியாத அளவுக்கு முடக்குவோம் என எச்சரித்ததும் நினைவிருக்கலாம்.

ஆரம்ப காலம் முதலே சியா, சன்னி பிரச்சனைகளால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துவருகிறது. ஈரானில் உள்ள சன்னி முஸ்லிம்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதாகவும் அதனால் பல சன்னி முஸ்லிம்கள் அரபு நாடுகளில் குடியேரி குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. லெபனான் மற்றும் சிரியா விவகாரங்களில் தனது பலமான எதிர்ப்பைக் காட்டும் ஈரான் பாலஸ்தீன பிரச்சனைகளில் அந்தஅளவுக்கு தலையிடுவதில்லை என்பதும் இந்த பிரச்சனைகளே காரணம்.”