17/09/2012 15:10
உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் ! -அமெரிக்க நிறுவன ஆய்வில் தகவல்!
சம்யம் மற்றும் ஆயுள் கணக்கேடுப்புக்கான ஆய்வு நிறுவனம் பியூ ஆய்வு மையம் (PEW RESEARCH CENTRE) ஆகும்.இந்நிறுவனம் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கிவருகிறது.
இந்த நிறுவனம் இஸ்லாத்தின் வளர்ச்சி குறித்து சென்ற ஆண்டு ஒரு ஆய்வை நடத்தியது.கடந்த 3 ஆண்டுகளாக 232 நாடுகளிலும், அந்த நாடுகளுக்குட்பட்ட பல பகுதிகளிலும் அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை அந்த நிறுவனம் சென்ற ஆண்டு வெளியிட்டது.பியூ ஆய்வு மையம் (pew research centre) வெளியிட்ட அந்த முடிவுகள் இஸ்லாத்தின் எதிரான சக்திகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
2011 ஆம் ஆண்டின் நிலவரப்படி
உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 161 கொடியைத் தாண்டுகிறது என்றும், இன்னும் 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.அதாவது உலக மக்கள் தொகையில் தற்போது நான்கில் ஒரு பாகம் முஸ்லிம்கள் ஆவர். அதே நேரத்தில், உலக கத்தோலிக்க கிறித்தவர்களின் எண்ணிக்கை 130 கோடி ஆகும்.
பியூ மைய ஆய்வாளர்கள் கடந்த 3 ஆண்டுகளாக 232 நாடுகளிலும் பகுதிகளிலும் மேற்கொண்ட இந்த ஆய்வில் புள்ளி விவரங்கள் தெரியவந்துள்ளது. ஆயினும் உண்மையில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை இதை வீட அதிகமாக இருக்கும் என்கிறார் இந்த ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான பிரியன் கிரைம். ஏனெனில், இந்த ஆய்வெல்லாம் 2009 மக்கட் தொகைக் கணக்கெடுப்பை அடிப்பக்டையாகக் கொண்டது என்று அவர் அதற்க்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவில் பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை என்கிறது இந்த ஆய்வு. 2001 ஆம் ஆண்டு பிரிட்டனில் 16 லட்சமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2011 லும் அதே அளவில் உள்ளதாக இந்த ஆய்வு காட்டுகிறது.உண்மையில் பிரிட்டனில் தற்போதைய நிலைமை படி 25 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் 80 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் பியோவின் ஆய்வில் 46 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளது .சீன, ரஷியா ஆகிய நாடுகளின் முஸ்லிம்களின் எண்ணிக்கையிலும் இதே நிலைமை காணப்படுகிறது.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் 10 பெரிய நாடுகள் ஆசியாவில் தான் உள்ளது. எகிப்து,அல்கீரிய,மெராக்கோ,துருக்கி,போன்ற நாடுகளும் இவற்றில் அடங்கும். உலக முஸ்லிம்களில் 20 % பேர் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவில்தான் உள்ளனர்.உலக முஸ்லிம்களில் ஐவரில் ஒருவர் இந்நாடுகளில் வசிக்கின்றனர். 62 % முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் மேற்கே துருக்கி முதல் கிழக்கே இந்தோனேசியா வரை பரவியுள்ளனர்.
ஆனால் இந்த ஆய்விலிருந்து சில உண்மைகள் வெளிப்பட்டுள்ளன; அவற்றை ஆய்வு குழுவால் மறைக்க முடியவில்லை. முஸ்லிம்கள் என்றாலே அரபியர்தான்; அரபியர் என்றாலே முஸ்லிம்கள்தான் என்ற வாதம் தவறு என்பதே இந்த ஆய்வு நிருபித்துள்ளது. ஆம்! உலக முஸ்லிம்களின் ஒரு சில விழுக்காடுதான் மத்திய கிழக்கு நாடுகளான அரபுநாடுகளில் இடம்பெறுகிறது.
உலக முஸ்லிம்களில் சியா பிரிவினர் வெறும் 10% முதல் 13% தான். சியா முஸ்லிம்களில் 80% னர் உலகில் ஈரான், பாகிஸ்தான், இந்தியா, ஈராக் ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கின்றனர்.
ஐரோப்பிய முஸ்லிம்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றே பலரும் கருதுகின்றனர்.இது மேற்கு ஐரோப்பாவிற்கு வேண்டுமானால் பொருந்தலாம்.ஐரோப்பாவின் மற்ற பகுதிகளான ரசியா,அல்பானியா,குசொவா ஆகிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அங்குள்ள பூர்வீகக் குடிகளே, ஆக ஐரோப்பிய முஸ்லிம்களில் பாதிக்கும் அதிகமானோர் மண்ணின் மைந்தர்கள்தான்.மேற்கு ஐரோப்பாவும் இதற்க்கு விதி விலக்கு அல்ல என்று பியூ அமைப்பின் துணை மேலாளர் அலன் கூப்பர்மன் குறிப்பிட்டுள்ளார்.
கூப்பர்மன் மற்றொரு விசையதையும் தெளிவுபடுத்துகிறார்:
சில நாடுகள் பற்றி 'முஸ்லிம் நாடுகள்' என்ற எண்ணமே யாருக்கும் தோன்றாது. ஆனால், அங்கெல்லாம் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியா,ரசியா,சீனா ஆகிய நாடுகள் எடுதுக்கட்டுகலாகும். அவர் குறிப்பிடும் நாடுகளில் இஸ்லாத்தின் அழுத்தமான வேர்கள் பரவியிருப்பதை வரலாறு கூறும்.இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் இந்தோனேசிய, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக முஸ்லிம்கள் அதிகம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பெரிய அரபு நாடாக கருதப்படும் எகிப்தில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையை வீட இது இரு மடங்காகும்.
அவ்வாறே, ஜெர்மனியில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை,லெபனானில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையை வீட பெரியது. ஜோர்தான், லிபியா ஆகிய இரு நாடுகளின் முஸ்லிம் எண்ணிக்கையை வீட ரசிய முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் எண்ணிக்கையை வீட எத்தியோப்பியா முஸ்லிம்களின் லிம்களை எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகம். சிரியா முஸ்லிம்களைவீட சீன முஸ்லிம்கள் அதிகம்.
சீனாவில் முஸ்லிம்கள் 2.2 கோடிபேர் உள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவித்தாலும், 5 கோடிப்பேர் இருக்கலாம் என்கின்றன கணக்கெடுப்புகள். சீனாவில் உள்ள முஸ்லிம்கள் அமைப்பு ஒன்று, சீனாவில் 10 கோடி முஸ்லிம்கள் இருப்பதாக குறிப்பிடுகின்றது.
சோவியத் ஒன்றியம் சிதைந்த பிறகு ரசியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2 கோடி ஆகும். ஆனால், 1.65 கோடி என்கிறது பியூ அறிக்கை, சுமார் 10 லட்சம் முஸ்லிமாக தலைநகர் மாஸ்கோவில் மட்டும் வாழ்கின்றனர்.
இஸ்லாமிய நாடுகள் இல்லாத நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரிய எண்ணிக்கையில் உள்ளனர். எத்தியோபியா:2.8 கோடி (மொத்த மக்களில் 34%); தான்சானியா:1.3 கோடி (30%); ஐவரிகோஸ்ட்: 80 லட்சம் (37%); மொசம்பிக்: 50 லட்சம் (23%); பிலிப்பைன்: 40.7 லட்சம் (5%); ஜெர்மன்: 40 லட்சம் (5%) என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த ஆய்வு இஸ்லாத்தை எதிர்ப்பவர்களுடைய வயிறுகளில் புளியைக் கரைத்துள்ளது. இஸ்லாத்திற்கு எதிராக எந்த அளவிற்கு சதி நடந்த போதிலும் அவைகளையெல்லாம் முறியடித்து வல்ல இறைவன் தனது மார்க்கத்தை மேலோங்கசெய்கிறான் என்பதும்,இது வல்ல இறைவனின் மார்க்கம்தான் என்பதற்கும் இந்த நிகழ்வுகள் சான்று பகர்க்கின்றன.
அல்ஹம்துலில்லாஹ்......