ஐநாவின் சர்ச்சைக்குரிய பகுதி பட்டியலில் இருந்து காஷ்மீர் நீக்கம்

15/11/2010 22:06

ஐக்கிய நாடுகள் சபையின் சர்ச்சைக்குரிய பகுதி பட்டியலில் இருந்து ஜம்மு-காஷ்மீர் நீக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவரும் பாகிஸ்தானுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

 

 

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பட்டியலில் காஷ்மீரை குறிப்பிடாததற்கு ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் பொறுப்பு வகிக்கும் அம்ஜத் ஹூசைன் சியல் எதிர்ப்பு தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய பகுதி பட்டியலில் ஜம்மு-காஷ்மீர் நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது. தற்போது அப்பட்டியலில் ஜம்மு-காஷ்மீர் இடம்பெறாதது கவனக்குறைவாக இருக்கலாம் எனக் கருவதாக சியல் தெரிவித்தார்.

nakkheeran.in