ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் கிடைப்பது கடினம் - ஒபாமா

04/11/2010 13:03

 

இந்தியா சர்வதேச சக்தியாக உருவெடுப்பதை தாம் ஆதரிப்பதாகவும், அதே சமயம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் கிடைப்பது கடினமே என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

இந்திய வருகையையொட்டி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர், " ஆசியாவில் அமெரிக்கா மேற்கொள்ளும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும், இந்தியா ஒரு அடிப்படையாக இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.இந்தியா ஒரு சர்வதேச சக்தியாக உருவெடுப்பதை நான் ஆதரிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அதே சமயம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெற ஆதரவு அளிப்பதாக கூறுவதையும் தவிர்த்தார்.

அதே சமயம் தமது இந்திய பயணத்தின்போது தொடர்ச்சியான பல அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி

இச்செய்தி அமெரிக்க அதிபரால் இந்தியாவிற்க்கு செலவுதானே தவிர ஒரு பலனும் இல்லை என்பதைத் தெறிவித்துள்ளது.