ஐ.நா.பாதுகாப்பு பேரவை நிரந்தர உறுப்பினராக இந்தியா: யுஎஸ் காங்கிரஸில் தீர்மானம்!

22/11/2010 14:46

ஐக்கிய நாடுகள் அவையின் செயல் அதிகாரம் பெற்ற பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்க்க வேண்டும் என்று ஐ.நா.வை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இன்று தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகத்தின் அமைதிக்காகவும், தெற்காசியாவின் மேம்பாட்டிற்காகவும் முக்கிய பங்காற்றிவரும் இந்தியாவை ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் நிரந்தர உறுப்பினராக்க ஐ.நா.அமைப்புப் பிரகடனத்தின் பிரிவு 23இல் திருத்தும் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அரசின் சார்பாக வலியுறுத்தும் இத்தீர்மானம் கஸ் பில்லிராக்கிஸ் என்ற உறுப்பினரால் முன்மொழியப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் அயலுறவுக் குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இத்தீர்மானம், இந்தியாவை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்றும், அங்கு அரசியல் கருத்துகளை வெளிப்படுத்த முழுமையான சுதந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது.

wedunia.com