ஒபாமா ஒரு சிறந்த பாம்பாட்டி: பிடல் கெஸ்ட்ரோ

24/11/2010 12:40

  அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சிறந்த ஒரு பாம்பாட்டி என கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

போர்த்துக்கல்லில் நடைபெற்ற மேற்குலக நட்பு நாடுகளின் உச்சிமாநாடு தொடர்பில் அவரால் வெளியிடப்பட்ட கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'நேட்டோவானது இராணுவக் குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு குழு. ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் போர் ஒரு மனிதப் படுகொலை நடவடிக்கை. அமெரிக்க ஜனாதிபதி ஒருபோதும் வாழ்ந்திராத ஒரு சிறந்த பாம்பாட்டிக்கான பரிசுக்குரியவர்" என குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினரை வாபஸ் பெறும் வாக்குறுதி பிற்போடப்படலாம் என ஒப்புக் கொண்டுள்ளார். நோபல் பரிசுக்கு அடுத்தபடியாக அவருக்கு இதுவரை ஒருபோதும் இருந்திராத சிறந்த பாம்பாட்டிக்கான பரிசை வழங்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

verakesari.lk