காமன் வெல்த் ஊழல் சுரேஷ் கல்மாடி ராஜினாமா

09/11/2010 15:25

டெல்லியில் காமன்வெல்த் போட்டி (அக்.3-14 ) நடந்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட 70 ஆயிரம் கோடி ரூபாயில் பெருமளவு ஊழல் நடந்தது தெரியவந்தது. 

 

 

 காமன்வெல்த் போட்டி தொடர்பான ஊழல் குறித்து விசாரிக்க, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தனிப்பிரிவை அமைத்தது.

இந்நிலையில் காமன்வெல்த் ஊழல் சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் கல்மாடி , காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற செயலர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

nakkheeran.in