கிரீஸ் நாட்டில் 2 வெளிநாட்டு தூதரகங்களில் பார்சல் குண்டு வெடித்தது

04/11/2010 15:22

கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ் நகரில் ஒரு கூரியர் நிறுவனத்தின் மூலம் மெக்சிகோ, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் தூதரகங்களுக்கு தபால் மூலம் வெடி குண்டு பார்சல் அனுப்பப்பட்து. மேலும், பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஷிக்கும் இது போன்ற ஒரு பார்சல் அனுப்பப்பட்டிருந்தது.
 
இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாணை நடத்திய போது சுவிட்சர்லாந்து, ரஷியா ஆகிய வெளிநாட்டு தூதரகங்களுக்கும் வெடிகுண்டு பார்சல் அனுப்பியிருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த தூதரகங்களை தொடர்பு கொண்டு உஷார்படுத்தினர்.
 
அதற்குள் அவை தூதரங்களை சென்றடைந்தது. எனவே ஏதென்சில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட பார்சல் வாசலில் வைத்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. அதில் வெடிகுண்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
 
பின்னர் அது தீப்பிழம்பை கக்கியபடி வெடித்து சிதறியது. தூதரகத்துக்கு வெளியில் வைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இத்தகவலை சுவிட்சர்லாந்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் பராகோ தெரிவித்தார். இது போன்று ரஷிய தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட வெடி குண்டு பார்சலும் வெடித்தது.
 
இவை தீவிர சிலி, பல்கே ரியா, மற்றும் ஜெர்மனி நாடுகளின் தூதரகங்களுக்கும் வெடி குண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டிருந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அவை கைப்பற்றப்பட்டன. இந்த பின்னணியில் கொரில்லா தீவிரவாதிகள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
 
கடந்த 2008-ம் ஆண்டு முதல் இது போன்ற தாக்குதல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இவர்களில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மாலைமலர்.காம்