குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்கள் - மோடி புதிய யுக்தி
குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தி ஸ்டண்ட் அடித்துள்ளார் முதல்வர் நரேந்திர மோடி.
குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம் வாக்குகளை கொஞ்சமாச்சும் கவர வேண்டும் என்பதற்காக முஸ்லீம் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியுள்ளது பாஜக
அகமதாபாத்தின் ஜூஹாபுரா வார்டில் அல் சயத் என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி பாஜக வேட்பாளராக படு பிசியாக வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து சயத் கூறுகையில், குஜராத்தின் வளர்ச்சி குறித்து மிகவும் அக்கறையுடன் உள்ளார் மோடி. 5.5 கோடி குஜராத்திகளும் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என அனைத்துத் தரப்பும் கலந்த சமுதாயமாகும்.
மோடி எங்களது தலைவர். இந்த மாநிலத்தின் முதல்வர் என்றார் சயத்.
சயத்தைப் போலவே மொத்தம் 9 முஸ்லீம் வேட்பார்களை பாஜக களம் இறக்கியுள்ளது. மொத்தம் 548 வார்டுகளுக்கு அக்டோபர் 10ம் தேதி குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.
Thatstamil