குஜராத் கலவரம் - மோடிக்கு எதிராக வக்கீல் குழு அறிக்கை

25/10/2011 17:55

 

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்வர் நரேந்திர மோடியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டினால் நியமிக்கப்பட்ட வக்கீல்குழு சமர்பித்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளனர். .


குஜராத் கலவரம் வழக்கு தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடியை விசாரிக்க தேவையில்லை. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட் நியமித்த வக்கீல் குழு, நரேந்திரமோடி கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றதாக கூறும் சஞ்சீவ்பட் மட்டுமின்றி, மோடி, மேலும் இரு உயர் போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரையும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளது. இவ்வாறு அறிக்கை சமர்பித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி நடந்த கவலரத்தின் போது, குல்பர்க் இனத்தினர் பலர் படுகொலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் எம்.பி. இசான் ஜாப்ரி என்பவரும் கொல்லப்பட்டார். மேலும் 65-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் முதல்வர் நரேந்திரமோடிக்கு எதிராக புகார் கூறிய முன்னாள் , ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீபட் , சப்ரீம் கோர்டில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மூத்த வக்கீல் ராஜு ராமச்சந்திரனை நியமித்தது. இவர் தனது அறிக்கையை சிறப்பு விசாரணை குழுவிடம் ( எஸ்ஐடியிடம்) சமர்ப்பித்துள்ளார். 


சஞ்சீவ் பட், நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று குஜராத் மாநில அரசு கூறுவதற்கு போதிய, வலுவான ஆதாரம் இல்லை. கலவரம் நடந்த போது சஞ்சீவ் பட் உளவுப்பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு தெரியாமல் முதல்வர் கூட்டம் நடத்த வாய்ப்பில்லை. மேலும் மோடி உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாரையும் விடுவிப்பது என்பதை, சஞ்சீவ்பட் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்த பிறகே தீர்மானிக்க வேண்டும். சம்பவ தினத்தன்று மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற இரு போலீஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட அனைவரையும் கோர்ட் முழுமையாக விசாரிக்க வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..


இந்த வழக்கில் முதல்வர் நரேந்திர மோடி மீதும், மூத்த காவல்துறை அதிகாரிகள் மீது வேண்டும் என்றே சஞ்சீவ்பட் குற்றம் சாட்டியிருக்கிறார் என்ற குஜராத் மாநில அரசின் புகாரையும் வக்கீல் குழு தலைவர் ராஜு ராமச்சந்திரன் நிராகரித்து விட்டார்.

 

dinamalar.com