குளோனிங் முறையில் 4 டோலி ஆட்டுக்குட்டிகள் உருவாக்கப்பட்டள்ளது

01/12/2010 17:08

 

முதல் டோலி ஆடு மூலம் மேலும் 4 டோலி ஆடுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 1996-ம் ஆண்டு “குளோனிங்” முறைப்படி “டோலி” என்ற செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது. 14 ஆண்டுகள் பிறகு அதில் இருந்து மேலும் 4 டோலி செம்மறிய ஆடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இங்கிலாந் தில் உள்ள நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கெய்த் கேம்ப் பெல் உரு வாக்கியுள்ளார்.

டோலி செம்மறி ஆடு பிறந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் நோய் மற்றும் மூட்டு நீக்கம் நோயினால் அவதிப்பட்டது. இருந்தும் அதில் இருந்து மேலும் டோலி செம்மறி ஆடுகளை உருவாக்கும் முயற்சியில் கேம்ப்பெல் குழுவினர் ஈடு பட்டனர்.

இதனால் பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டது. இருந்தும் புதிய தொழில் நுட்ப முறைகளை கையாண்டு மேலும் 4 டோலி செம்மறி ஆடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை டோலியின் உடல் உயிரணுவில் இருந்தும், அதன் பால்மடி திசுக் களிலும் இருந்தும் பிறக்க வைக்கப்பட்டுள்ளன. முதலில் தாய் டோலியை உரு வாக்க 277 கருமுட்டைகள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால் இந்த முறை ஒரு டோலியை உருவாக்க 5 கருமுட்டைகளே தேவைப் பட்டது என விஞ்ஞானி கேம்ப்பெல் தெரிவித்துள்ளார். தற்போது பிறந்துள்ள 4 டோலி ஆட்டு குட்டிகளும் உயிருடன் உள்ளன. அவை நாட்டிங்காம் பல்கலைக் கழகத்தில் உலா வருகின்றன. maalaimalar.com