சமச்சீர் கல்வி ரத்து: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

16/06/2011 12:27

மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், ராமநாதபுரம் எம்.எல்.ஏ.வுமான ஜவா ஹிருல்லா நேற்று ராம நாதபுரம் நகரில் வார்டு வார்டாக சென்று வாக் காளர்களுக்கு நன்றி தெரி வித்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

 
 தமிழக அரசியல் வர லாற்றிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் சபாநாயகர். அருந்தியினர் வகுப்பை சேர்ந்தவர் துணை சபா நாயகர். சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர் சட்டமன்ற செயலர் பதவிகள் கொடுத்து முதல்வர் ஜெயலலிதா பெருமைப்படுத்தி உள்ளார்.
 
இதனை பார்க்கும்போது மிகவும் பிறப்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள், அருந்ததியின மக்களின் ஆதரவான ஆட்சியாக விளங்குகிறது. கடந்த தி.மு.க. அரசு புதிய சட்டமன்ற அலுவலகம், அண்ணா நூலகம் ஆகிய வற்றை அவசர கோலத்தில் கட்டி திறந்தனர்.
 
அதேபோல சமச்சீர் கல்வியும் அவசர கோலத்தில் தயார் செய்யப்பட்டு நடைமுறைக்கு வர இருந்தது. ஆனால் அதை அ.தி.மு.க. அரசு ரத்து செய்ததற்கு மனித நேய மக்கள் கட்சி வரவேற் கிறது. மீனவர்களின் நீண்டகால கோரிக்கையான இலங்கை மீனவர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்தவும், கடல் அட்டை பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதை நீக்கவும் வலியுறுத்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன்.
 
ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் குறைபாடுகளை விரைந்து முடிக்கவும் ராமநாத புரத்திற்கு கூடுதல் ரெயில் விடவும், மருத்துவக் கல்லூரி அமையவும் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலி முல்லாகான், அ.தி.மு.க. தொகுதி செயலாளர் முருகேசன், நகர செய லாளர் அங்குசாமி, பொதுக்குழு உறுப்பினர் கணபதி ஆகியோர் உடன் இருந்தனர். maalaimalar.com