சர்வதேச குர்ஆன் எறிப்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்க சர்ச் அழைப்பு

01/09/2010 14:14

அமெரிக்காவின் கெய்னெஸ்வெல்லி (Gaynesvellie) மற்றும் ப்ளோரிடா (Florida) மாகாணங்களில் செயல்பட்டுவரும் தி டவ் வோல்டு அவுட்ரீச் சென்டர் (The Dove World Outreach Center) என்ற சர்ச் தன்னுடைய இஸ்லாமிய எதிர்ப்பின் அடையாளமாக வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் நாளில் அதாவது உலக வர்த்தக மையக்கட்டிடம் தகர்க்கப்பட்ட 9ஆவது ஆண்டு நினைவு தினத்தில் ”சர்வதேச குர்ஆன் எரிப்பு தினத்திற்க்கு” அழைப்பு விடுத்துள்ளது. இந்நிகழ்வு அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெரும் எனவும் தெறிவிக்கப்பட்டுள்ளது.

shirtஅந்த அமைப்பின் இணையதளத்திலும் பேஸ்புக் பக்கத்திலும் மற்றும் யுடூப் இணையதளத்திலும் வீடியோ வெளியிட்டு அதற்க்கு ஆதரவு திரட்டிவருகிறது. கிருஸ்தவர்களை இஸ்லாத்திற்க்கு எதிராகவும் இறைமறைக்கு எதிராகவும் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் இஸ்லாம் இஸ் ஆப் த டெவில் (சாத்தானிய மதம்) ("Islam is of the Devil") என்ற  ஜோன்ஸ் என்பவர் எழுதிய புத்தகத்தின் மூலமும்  பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளது. இஸ்லாம் தவறான வழியில் மக்களை அழைத்துச் செல்வதாகவும் இஸ்லாத்ததை பின்பற்றுபவர்கள் நரகம்தான் செல்வார்கள் என்றும் தம் பங்குக்கு விளாசியிருக்கிறது அந்த சர்ச் நிர்வாகம். டீசர்ட் மூலமும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் படத்தில் உள்ள டீசர்ட் அணிந்த இருந்த ப்ளோரிடா மாகாண பள்ளி மாணவன் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். இந்தப் பிரச்சாரங்கள் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 https://thinkprogress.org/2009/08/26/islam-devil-shirt  www.doveworld.org

இதற்ககு அமெரிக்க முஸ்லிம்களிடமும் கிருஸ்தவர்களிடமும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில். அமெரிக்க முஸ்லிம் அமைப்பு (Council on American-Islamic Relations ) ஒன்று ரமளான் மாதம் முழுவதும் இஸ்லாம் பற்றிய வகுப்புகள் நடத்தியும் அமெரிக்கா முழுவதும் 100,000 திருக்குர்ஆன் பரதிகளை உள்ளுர், மாநில மற்றும் தேசிய தலைவர்களுக்கு வழங்குவது எனவும் முடிவெடுத்துள்ளது.

https://edition.cnn.com/2010/US/07/29/florida.burn.quran.day/index.html#fbid=F76xynt6Ia0&wom=false