MDPS - ன் 2011க்கான புதிய நிர்வாகிகள் தேர்வு

07/01/2011 19:57

இன்று மாலை சுமார் 5 மணியளவில் புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாகத் தேர்வு நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துர் ரஜாக் அவர்கள் தலைமையில் முன்னால் ஜமாஅத் மற்றும் சங்கத்து நிர்வாகிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது, அதன்படி புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கும் பணியை அந்த குழு சில நேர ஆலோசனைக்குப் பின் புதிய நிர்வாகத்தை அறிவித்தது அதன் விபரம் வருமாறு...

 

தலைவராக சகேதாரர் அஹமது கபீர் அவர்களும்

துணைத் தலைவராக சகோதரர் ஜவஹர் அலி அவர்களும்

செயலாளராக சகோதரர் சகுபர் சாதிக் அவர்களும்

துணைச் செயலாளராக சகோதரர் அரபி முஹம்மது அவர்களும்

பொருளாளராக சகோதரர் அப்துல் ரஜாக் அவர்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

புதிதாக இரண்டு புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

 

அதன்பின் பதவியேற்ற புதிய நிர்வாகிகள் உரைநிகழ்த்தினர். பெரும்பாலன கருத்துக்கள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர் பேசும்போது தனியாகத் தொழுவதால் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு மட்டும் இந்த ஜமாஅத்தில் எந்த உரிமையும் இல்லை என பேசினார் அதற்கு ஆட்சேபம் எழுந்தது. ஜமாஅத்தில் பிறந்த யாருக்கும்  உரிமையில்லை என்று கூற யாருக்கும் உரிமை இல்லை எனவும், ஜமாஅத்தும் நிர்வாகமும் யாருடைய தனிப்பட்ட சொத்தில்லை எனவும் எடுத்துவைக்கப்பட்டதால், புதிய நிர்வாகத்தின் துணைத் தலைவர் குறுக்கிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

அதன்பின் நமது இணையதளத்தில் வெளியிட்ட ஒரு செய்தி சம்மந்தமாக சில சபை ஒழுக்கம் தெறியாதவர்களால் எழுப்பப்பட்ட சர்ச்சை தவிர வேறு பிரச்சனை இன்றி கூட்டம் நிறைவேறிது.