தமிழகத்தை நோக்கி வரும் பயங்கர புயல் 'ஜல்'

07/11/2010 14:42

சென்னையில் இருந்து 950 கி.மீ தூரத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் வலுவடைந்து வருவதோடு, தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று தெரிகிறது.இந்தப் புயலுக்கு 'ஜல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல், கடந்த 31ம் தேதி மேற்கு பசிபிக் கடலில் உருவானது. பின்னர் அது வங்கக் கடலை நோக்கி நகர்ந்து நேற்று 950 கி.மீ. தொலைவில் உள்ளது.

மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் முன்னேறும் இந்தப் புயல் படிப்படியாக வலுவடைந்து பயங்கர புயலாக மாறும் அபாயம் உள்ளது.

இப்போது இந்தப் புயல் நகரும் வேகத்தை வைத்து பார்க்கும்போது தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரை மற்றும் ஆந்திராவின் தெற்கு கடற்கரை பகுதிக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை (7ம் தேதி) மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது மணிக்கு 90 முதல் 120 கி.மீ. வேகம் வரை பலத்த சூறாவளி காற்று வீசும்.

இதனால், அந்தமானில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் நாளை (சனிக்கிழமை) காலை முதல் கனமழை பெய்ய ஆரம்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.

புயல் காரணமாக கடல் மிகக் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புயல் காரணமாக தமிழத்தின் கடலோரப்பகுதியில் கடும் மழைபெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓருகிறது. மாவட்ட காவல்துறை உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

newindianews.com