தவறை ஒப்புக் கொண்ட புஸ் - உயிர் சேதத்தை திரும்ப தருவாரா?

04/11/2010 12:59

ஈராக் மீது போர்  தொடுத்தது தவறு  ஜார்ஜ்புஷ் “திடீர்” மனமாற்றம்அமெரிக்காவின் முன்னால் அதிபர் ஜார்ஜ் புஸ் தனது டெசிசன் பாயின்ட்ஸ் (Decision Points) என்ற புத்தகத்தில் சில அனுபவங்களையும் அதிபரக இருந்தபோது நடந்த சில முக்கிய பிரச்சனைகளையும் அதற்க்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் நினைவு கூர்ந்துள்ளார். அதில் அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள், புயல்கள் போன்ற முக்கியமான நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் ஈராக்கிற்கு எதிரான போரும் அதில் ஏற்பட்ட தோல்வியும் குறிப்பிடத் தக்கது. இந்த புத்தகம் வரும் 9-11-10 வெளியிடப்பட உள்ளது.

 

ஈராக் போர் விவகாரம் உலகலாவிய பிரச்சனையாக உருவெடுத்ததையும், அங்கு பிடிபட்ட குற்றவாளிகளை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்ததையும் தம் நாட்டை காப்பாற்ற எடுத்த நடவடிக்கையின் விளைவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக குற்றம் சுமத்தி போர் நடவடிக்கையை துவங்கியதாகவும் ஆனால் அங்கு பேரழிவு ஆயுதம் இல்லை என்று தெறியவந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார். 2003 போரின் முந்தைய நடவடிக்கைகளிலேயே உண்மையை உணர்ந்து படைகளை குறைத்திருக்க வேண்டும் எனவும் அதை செய்யாதது பெரிய தவறு எனவும் ஒப்புக் கொண்டுள்ளார். https://www.freep.com/article/20101103/NEWS15/101103031

’’ஈராக் மீது போர் தொடுத்ததில் நான் பல தவறுகளை செய்து விட்டேன். போர் தொடுத்ததன் மூலம் நான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போன்ற நிலையில் இருந்தேன். ஈராக் தொடர்பான பிரசாரத்திலும் தவறு நடந்து விட்டது. பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்து வதிலும் தவறு நேர்ந்து விட்டது. போர் நடந்தது முறையிலும் தவறு செய்து விட்டோம்’’என்று ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
Nakkheeran.in

 

பல ஆயிரக்கணக்கான உயிர்களையும், உடமைகளையும், பொருளாதாரத்தையும் அழித்துவிட்டு தற்போது ஒப்பதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது உலக அளவில் மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் ஈராக் மீது நடத்தப்பட்ட போருக்கு பேரழிவு ஆயுதங்கள் காரணம் இல்லை என்ற உண்மையை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். சதாம் உசேனை வளரவிட்டால் அது அமெரிக்காவின் பொரளாதாரத்தை பாதிக்கும் எனவும், ஈராக்கின் எண்ணெய் வளத்ததை திருடவும் ஆதிக்க வர்கம் போட்ட திட்டமும் அதற்க்கு உலகின் மற்ற இஸ்லாமிய விரோதப் போக்குடைய தலைவர்களை வைத்து அந்த நாட்டுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய மனிதஉரிமை மீரலை அரங்கேற்றிவிட்டு தற்ப்போது வருத்தம் தெறிப்பதாகவும் ஒப்புக் கொள்வதாகவும் சொல்வது உலகை ஏமாற்ற கையாளும் புதிய உக்தியேயன்றி வேறில்லை. எதிர்காலம் புஸ்ஸை முஸ்லிம் விரோத சர்வாதிகாரியாக சித்திரித்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாகவே இதை பார்க்க முடிகிறது.

அபூஅஸ்ஃபா