தீவிரவாத நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ்: காங்.

02/11/2010 12:51

 

ஆர்எஸ்எஸ்ஸும், அதன் சகோதர அமைப்புகளும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு கட்சித் தலைவர் சோனியா தலைமை தாங்கினார். நாடு முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.


விரிவான புலன் விசாரணைகளின் மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் உண்மையான குணத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன என காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் அதன் உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசக் கட்டமைப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் உள்ள தீவிரவாத, மதவாத சக்திகளை எந்த நிலையிலும் காங்கிரஸ் எதிர்த்துப் போராடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Nakkheeran.in