தேசிய அடையாள அட்டை:பிப்.9ல் கணக்கெடுப்பு

20/11/2010 19:21

ஒவ்வொரு இந்திய குடி மகனுக்கும் தேசிய அடையாள அட்டை வழ ங்கும் ‘ஆதார்’ திட்டத்தை செயல்படுத்த 2ம் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் பிப்.9ம் தேதி நாடு முழுவதும் துவங்குகிறது. இதில் நாட்டில் உள்ள எந்த குடிமகனும் விடு படாத வகையில் ரோட்டில் திரியும் பிச்சைக்காரர்களை கூட கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் 15வது மக்கள் தொகை கணக் கெடுப்பு நடப்பாண்டில் துவங்கியது. தமிழகத்தில் கணக்கெடுப்பு பணி ஜூன் 1 முதல் ஜூலை 15ம் தேதி வரை நடந்தது. இப்பணியில் 1.5 லட்சம் பேர் ஈடு பட்டனர். கணக்கெடுப்பின் போது ஒரு அட்டவணை யில் வீடுகள் பற்றியும், மற்றொரு அட்டவணை யில் வீட்டில் வசிக்கும் நபர்கள் பற்றியும் 35 கேள்விகள் கேட்டு விவர ங்கள் சேகரிக்கப் பட்டன.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இந்திய குடியு ரிமை பெற்ற எல்லாருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் ‘ஆதார்’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் தலைவராக இன்போசிஸ் மென் பொருள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நீல்கேனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த திட்டத்தின்படி இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் 12 எண்களை கொண்ட அடையாள எண் வழங்கப் பட உள்ளது.
 

 


அவர்களது புகைப்படம், கைவிரல் களின் ரேகை, கண்களின் கருவிழிகள், முகவரி உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப் படும். அதன் மூலம் தேசிய அடையாள அட்டை (பயோமெட்ரிக் கார்டு) வழங்கப்பட உள்ளது.


இனி வரும் காலங்களில் அரசின் சலுகைகள் பெறுவதற்கும், ரேஷன் அட்டை, வங்கி கணக்கு, பான்கார்டு பெறுவதற்கும் தேசிய அடையாள அட்டை கட்டாய மாக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை மகாராஷ்டிரா மாநிலம் நன்தர்பார் மாவட்டம் ஷாகாதாவில் செப்.29ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் துவக்கி வைத்தார்.


இத்திட்டப்படி அடுத்து ஓராண்டிற்குள் 10 கோடி பேருக்கும், 2014ம் ஆண்டிற்குள் 15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தேசிய அடையாள வழங்க அரசு இலக்கு நிர்ணயி த்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பின் 2ம் கட்ட பணியாக இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இதற்கான பணிகளை மேற்கொள்ள தேசிய அளவில் 900 பேருக்கு ஒரு களப்பணியாளர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான பட்டியல் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு தனி நபரையும் நேரில் சந்தித்து பெயர், தொழில், படிப்பு, வருமானம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற உள்ளனர்.


அப்போது தான் கைரேகை மற்றும் கருவிழி படலங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.


இப்பணிகள் பிப்.9ம் தேதி துவங்கி பிப்.28ம் தேதி வரை நடக்கிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் எந்த ஒரு குடிமகனும் விட்டுபோகாத வகையில் நிலைய குடும்பங்கள் என்ற தலைப்பில் அனாதை விடுதியில் தங்கியிருப்பவர்கள், ஆதரவற்றோர், லாட்ஜ்களிலே தங்கி வாழ்க்கை நடத்துபவர்கள், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள், ரோடுகளில் சுற்றித் திரியும் பிச்சைக்காரர்கள் ஒருவர் கூட விடுபடாமல் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க உள்ளனர்.

இப்பணிகளில் ஈடுபடும் 6 பேரை கண்காணிக்க ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு களப்பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் தாலுகா வாரியாக பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளது.
nakkheeran.in