நமதூரில் நடைபெற்ற பிரம்மாண்ட சுன்னத் கல்யாணம்

04/11/2010 20:16

 

நமதூரில் நடைபெற்ற பிரம்மாண்ட சுன்னத் கல்யாணம்

2010-10-25 14:24

கடந்த 4-10-10 அன்று நமதூரில் சுன்னத் கல்யாணம் என்ற பெயரில் மார்க்கத்திற்குப் புறம்பான ஒரு கூத்து நடைபெற்றது. அதில் வெளியூரில் இருந்து வரவளைக்கப்பட்ட பேண்ட் வாத்தியம், குதிரை மற்றும் பொம்மையாட்டம் என கலைகட்டியது. இதற்க்காக அந்த சுன்னத் மாப்பிள்ளையின் தந்தை செலவு செய்த பணம் சுமார் 1 லட்சம். இந்த சமுதாயத்தின் பணம் எவ்வாரெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்று பாருங்கள். இன்னும் நமதூரில் வருமையில் வாடுபவர்கள் இருக்கிறார்கள். பிள்ளைகளின் படிப்பு செலவுக்குக் கூட வட்டிஇல்லா கடன் திட்டத்தில் கடன் பெற்றவர்கள் ஏராளம். ஆனால் அதல்லாம் இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. ஊருக்குள் நம் புகழ் (?) ஓங்க எவ்வளவு செலவு செய்யவும் தயார் என்ற என்னத்தில்தான் இருக்கிறார்கள்

 

இதை தீமை என்று தடுக்க எவரும் இல்லை மாறாக ஜமாஅத்தார்கள், சங்கத்தார்கள் மற்றும் பொதுமக்கள் என விழாவில் கலந்து கொண்டவர்கள் நல்லா சாப்பிட்டார்கள். சாப்பாட்டுக்குப் பின் அஹமது அமீன் ஆலிம் (கருத்த ஆலிம்ஷா) அவர்கள் மட்டும் (திடீரென்று வந்த இறையச்சமோ என்னவோ) வீட்டுக்காரரைக் கூப்பிட்டு ”ஏன் இவ்வளவு ஆடம்பரம் செய்கிறீர்கள் கொஞ்சம் குறைத்து இருக்கலாமே” என்று கேட்டுள்ளார் (குறைக்கத்தான் சொல்லியிருக்கிறார் மார்க்க அடிப்படையில் தவறு என சுட்டிக்காட்டவில்லை).

  

இதற்க்கெல்லாம் காரணம் மக்களின் மார்க்க அறியாமையே! மார்கத்தை அறிந்த ஆலிம்கள் மக்களுக்கு மர்க்கத்தை தூயவடிவில்  சொல்லாமல் (மக்களுக்கு மார்க்கம் தெறிந்துவிட்டால் அவர்கள் பொலப்பு) தங்களுக்கு வருமானம் பாதிக்க கூடாது என்பதற்க்காகவும், பழமைவாதிகள் மற்றும் பணக்கார தர்ஹாவாதிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்க்காகவும் மார்கத்தை தங்கள் வசதிக்கேற்ப்ப வளைத்து நெளித்து சொல்லிவிட்டு என்னைக்காவது சிறிது இறையச்சத்துடன் எதையாவது சொன்னால் மக்கள் ஏற்க்க மறுக்கின்றனர்.

 

மார்க்கத்தை அதன் தூயவடிவில் சொன்னால் அதை மக்கள் ஏற்க்கத் தயாராக உள்ளனர். புதுவலசையில் உள்ள எத்தையோ மக்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸும் தான் இஸ்லாம் என்று ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் எல்லாம் ரசூல் (ஸல்) அவர்களின் வாரிசுகளோ, வானத்திலிருந்து குதித்தவர்களோ அல்லது அரபுநாட்டு இறக்குமதியோ கிடையாது. நமக்கு தெறிந்து சில வருடங்களுக்கு முன் புகைக்கும் பழக்கமுடைய, குடி பழக்கமுடைய, வட்டி வாங்கிய மற்றும் கொடுத்த, வரதட்சனை வாங்கியவர்களாக ஏன் பள்ளிவாசலுக்கு வராதவர்கள் எல்லாம் இன்று அல்லாஹ்வுடைய நட்டத்தால் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் சொல்வதைக் கேட்டு இறையச்சமுள்ள மக்களாக மாறி இருக்கின்றனர், தம்மிடம் இருந்த எத்தனையோ கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டவர்களும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படவேண்டும் என்று அனைவரும் துஆ செய்ய வேண்டும்.

 

தனிநபர் செய்யும் ஆடம்பரங்களைப்பற்றி நாம் விமர்சிப்பதில்லை, அவரது விருப்பம், அவரது பணம், அவர் செய்கிறார் எனறாலும் சுன்னத் (விருத்த சேதனம்) என்ற மார்க்க கடமையில் ஆடம்பரமும் வீண் பெருமையும் நுளையும் போது அதைத் தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இது போல் செய்ய நினைத்து வட்டிக்கும் வாசிக்கும் வாங்கி அல்லல் படுவதை கண்முன்னே பார்த்து வருவதால் இதனை இங்கு குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நமது நோக்கம் மக்களை மார்க்கத்தின்பால் அழைப்பதும், தெளிவுபடுத்துவதும் தான். யாரையும் புண்படுத்துவதற்கக்காக அல்ல.

 

அஹமது அமீன் ஆலிம்

அஹமது அமீன் ஆலிம் அவர்களைப் பற்றி இங்கு சில விஷயங்கள் சொல்ல வேண்டியுள்ளது. நமதூருக்கு வந்த ஆலிம்களில் நீண்டகாலம் பணிபுறிந்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு, சுமார் 20 வருடங்கள் புதுவலசையில் பணியாற்றியுள்ளார். நமதூருக்கு வந்த பிறகு தான் அவருக்கு குழந்தை பாக்கியம் வந்ததாகவும், ஹஜ்ஜுக்கு போற பாக்கியம் கிடைத்ததாகவெல்லாம் அவரே சொல்லியும் இருக்கிறார்.

 

இவர் புதுவலசைக்கு வரும் வரை வித்ருத் தொழுகையை ஷாஃபி மற்றும் ஹனபி தனித்தனியாக தெழும் வழக்கம் இருந்தது. இவர் அதை ஒரே இமாம் ஜமாஅத்தின் கீழ் மாற்றி தொழுகை நடத்தினார்.

 

நமதூ இளைஞர்களுக்கு குர்ஆன் ஓத தெறியாமல் இருப்பதை கேள்விப்பட்டு ஒரு ஜும்ஆ பயானில் ”இளைஞர்களே குர்ஆன் ஓதத் தெறியாது என்ற வெட்கப்படாதீர்கள் உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எப்பவேண்டுமானாலும் குர்ஆன் ஓதக் கற்றுத் தர நான் தாயாரக இருக்கிறேன்” என்றெல்லாம் கூறி ஓதக்கற்றுக் கொடுத்தவர். ஏன் இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் அவரிடம் ஓதியவர்கள்தான். இதெல்லாம் அவர் வந்த ஆரம்பகாலத்தில் நடந்தது. ஆனால் இப்போது ”மார்கத்திற்கு முரணாக ஏன் நடக்குறீர்கள்?” என்று கேட்டால், தவறுதான், ஜமாஅத் சொல்கிறது, பெரியவர்கள் சொல்கிறார்கள் என்று கூறி மழுப்புகிறார். நாளை மறுமையில் இறைவன் முன் நிறுத்தப்படும் போது இதே மழுப்பலான பதிலைச் சொல்வாரா? என்று யோசித்து பார்க்கவேண்டும்.

 

நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்புகள் பற்றி (மறுமைநாளில்) விசாரிக்கப்படுவீர்கள். ஒரு தாய் தன் கணவனின் வீட்டிற்கு பொறுப்பாளி அந்த பொறுப்பை பற்றியும் அவள் விசாரிக்கப்படுவாள்.அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 893

 

ஆலிம்களை விமர்சிப்பதும், குறைகூறுவதும் நமது நோக்கமல்ல, அது நமது வேலையுமில்லை. ஆனால் மார்க்கத்தை எடுத்துச் சொல்லவேண்டிய ஆலிம்களே இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்குளுக்கு சில உலக ஆதாயங்களுக்காக விலைபோவதும், துணைபோவதும் வேதனையாக இருக்கிறது. அந்த வேதனையின் விளைவுதான் இந்தக் கட்டுரை.

 

நாம் ஏன் இதை சொல்ல வேண்டும் என்றால், அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள்...

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர் களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். 3:110.

அல்லாஹ்வை நம்பி, நன்மையை ஏவுவதாலும் தீமையைத் தடுப்பதினாலும் தான் அல்லாஹ் நம்மை சிறந்த சமுதாயம் என்று கூறுகிறான். இது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்

 

“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். 31-17

இந்தவசனம் அதனால் ஏற்படும் கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளச்சொல்கிறது.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவர் ஒரு தீமையை கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும்.அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்) இது இறைநம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்". ( அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) : முஸ்லீம்)

 

இந்த வசனத்தின் அடிப்படையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழியையும் அடிப்படையாக வைத்து நாம் தீமைகளை முடிந்தவரை தடுக்க முயற்சி செய்கிறோம், சில நேரங்களில் நாவாலும், இது போன்ற எழுத்துக்காளாலும் தடுத்து வருகிறோம். வரதட்சனை போன்ற தீமைகளைப் பொருத்தவரை மனதால் வெறுத்து ஒதுங்கியும் வருகிறோம்.

 

நிறைவாக நாம் அஹமது அமீன் ஆலிம் அவர்களிடம் கேட்பது ”20 வருடங்களாக புதுவலசையில் என்ன சம்பாதித்தீர்கள் என்பதை விட்டு புதுவலசை மக்களை மார்கத்தின் பால் அழைத்து அவர்களை இறைவனிடம் எவ்வளவு நம்மையினை சம்பாதிக்க வைத்தீர்கள்?” என்பதை இறையச்சத்துடன் சிந்தித்து பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். 

 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டப் போதுமானவன்.