பத்துவயதில் தாயாகிய ஸ்பெயின் நாட்டு சிறுமி

04/11/2010 14:37

ஸ்பெயின் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதில் 13 வயது சிறுமிகளுக்குக் கூட தடையின்றி கருத்தடை மருந்துகள் கிடைக்க அந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. கரணம் அங்க இளம் வயதில் தாயாகும் சிறுமிகளை கட்டுப்படுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெறிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் எலீனா என்ற 10 வயது சிறுமி ஒரு பெண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தையின் தந்தைக்கு வயதென்ன தெறியுமா? 13 வயது. இந்நிலையில் பிரசவம் நார்மல் டெலிவரியாம், குழந்தையும் தாயும் நலமாம். இந்த செய்திகுறித்து மக்கள் ஏன் ஆச்சரியப் படுகிறார்கள் என்று தெறியவில்லை என்றும் ஸ்பெயினில் 10 வயதில் திருமணம் செய்துகொள்வது சாதாரணமான நிகழ்வுதான் என்று அந்த சிறுமியின் பெற்றோர் தெறிவித்துள்ளது தான் இதில் ஹைலைட்.

 

மேலும் ஸ்பெயினில் 13 வயதில் திருமணம் செய்துகொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியும் உள்ளதாம். (நம்மநாட்டில் தான் இன்னும் முன்னேராமல் இருக்கிறார்கள், ஸ்பெயினைப் பார்த்தாவது புத்தி படிக்கட்டும்)

 

இதில் உள்ள மேலதிக தகவல் என்னவென்றால், இதுபோல் 2006ம் ஆண்டு 12 வயது சிறுமி ஒருவர் டிரெஸ்ஸா மிடில்டென் என்ற இங்கிலாந்து நாட்டு சிறுமி அந்நாட்டின் மிகச்சிறிய தாய் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி 2010ல் சீனாவைச் சோந்த 9 வயது சிறுமி ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் அன்டலுசியா என்ற பகுதியில் மட்டும் 177 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அந்த குழந்தைகளிலன் தாய்மார்களுக்கு அதிகபட்ச வயது 14 எனவும் தெறிவித்துள்ளது.