பாகிஸ்தானில் யுரேனியத்தை அகற்ற அமெரிக்கா முயற்சி: விக்கிலீக்ஸ்

29/11/2010 15:05

பாகி்ஸ்தானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்ற அமெரிக்கா முயற்சி செய்து வருவதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

 

அணுஆயுதம் தயாரிப்பதற்கு அந்த யுரேனியத்தை பாகிஸ்தான் பயன்படுத்தலாம் என்பதால் தனது உயர் அதிகாரிகள் தெரிவித்த ஆலோசனைக்கு அமெரிக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்தது என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கடந்த 2007-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானி்ல் இருந்து செறியூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்ற அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகவும், பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் குறித்து அமெரிக்காவும் பிரிட்டனும் மிகவும் கவலைப்படுவதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

 

 

இதனிடையே, பாகிஸ்தான் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இந்த தகவல் அந்நாட்டு ஊடகங்களில் முக்கியச் செய்தியாக வெளியாகியுள்ளது.

dinamani.com