பாக். மசூதி குண்டுவெடிப்பில் பலி 70ஆக உயர்வு

07/11/2010 13:24

பெஷாவர் அருகேயுள்ள தாரா ஆதம் கெல் என்ற இடத்தில் நேற்று அங்குள்ள மசூதியில் நடந்த தொழுகையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு 67 பேர் பலியாயினர்.

திடீரென ஒருவர் தான் உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த குண்டை வெடிக்க செய்தான். தீயுடன் கூடிய புகைமண்டலம் பரவியது. இதை தொடர்ந்து அங்கு பதட்டமும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்தும் ராணுவம், போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர். தற்கொலை தாக்குதலில் மசூதியின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது.

இந்த தாக்குதலில் 67 பேர் உடல் சிதறி பலியாகினர். 100-க்கும் மேற்பட்டடோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பெஷாவரில் உள்ள ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் பலத்த காயத்துடன் ரத்தக் களறியாக காப்ணப்பட்டனர்.

இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே சாவுஎண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. படுகாயத்துடன் பலர் அனுமதிக்கப்பட்டிருந்ததால் ஆஸ்பத்திரி சுடுகாடு போன்று காட்சி அளித்தது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழுது தவித்து கொண்டிருந்தனர்.

நேற்று மேலும் ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. பெஷாவரில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் பாத்பார் நகரம் உள்ளது. அங்குள்ள மசூதியில் மாலையில் நடத்த தொழுகையின் போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியானார்கள் 24 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ¢ஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தலிபான் தீவிரவாதிகள் ஒருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி அரசு மற்றும் போலீசார் அவர்கள் ஒருக்க முடியாது. எனவே இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பெஷாவர் மாகாண மத்திரி மியான் அப்தீகள் உசேன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நேற்று ஒரேநாளில் 2 மசூதிகளில் தற்கொலை தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தள்ளது. இந்த சம்பவங்ளில் 70 பேர் பலியாகி உள்ளனர்.

webdunia.com