பாபர் மசூதி தீர்ப்பு குறித்து விளக்க பொதுக்கூட்டம் - பிஜே கடுமையான விமர்சனம்.

11/10/2010 13:39

கடந்த 30-9-2010 இந்தியாவின் வரலாற்றில் புதிய இடம் பிடித்துள்ள நாள். அன்றுதான் பாபர் மசூதி நிலம் குறித்த தீர்ப்பு அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னோ கிளையின் நீதிபதி சுதிர் அகர்வால், நீதிபதி தரம் வீர் சர்மா மற்றும் நீதிபதி சிப்கத் உல்லா கான் ஆகியோர் கொண்ட சிறப்பு பென்ச் வரலாற்று பிழையான ஒரு தீர்ப்பை கூறியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த விரக்தியுடன் செய்வதறியாது திகைத்து நிர்க்கினறனர். இந்நிலையில் சென்னை மண்ணடியில் தீர்ப்பு குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திட்டமிட்டு நேற்று 10-10-10 அன்று சென்னையில் நடைபெற்றது. தீர்ப்பு குறித்து முஸ்லிம்களால் நடத்தப்படும் முதல் பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தின் முக்கியத்துவம் கருதி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்புக்கு ததஜ நிர்வாகம் ஏற்ப்பாடும் செய்திருந்தது. பெருவாரியான மக்கள் உலகம் முழுதும் அந்த பொதுக்கூட்டத்தை பார்த்தனர். (அதன் சுருக்கத்தை புதுவலசை.இன் இணையதளத்திற்க்காக பதிவு செய்கிறோம்.)

அதில் பாபர் மசூதி தீர்ப்பும் முஸ்லிம்களின் கடமையும் என்ற தலைப்பில் சிறப்புறையாற்றிய சகோதரர் பிஜே தமது கடுமையான கண்டனத்தை தெறிவித்ததோடு நீதிபதிகளையும் காங்கிரஸ், பாஜக மற்றும் இதர சம்மந்தப்பட்வர்களையும் கடுமையாக விமர்சித்தார். மாடு மேய்க்க கூட லாயக்கில்லாதவர்களெல்லாம தீர்ப்பு கூறவந்து விட்டதாகவும், மதநம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு சொல்வதாக இருந்தால் மடத்தில் இருந்து சொல்லவேண்டும் நீதி மன்றம் வரக்கூடாது என்றும் விமர்சித்தார்.

முன்னதாக 8700 பக்க தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள விசயங்களை வரலாற்று சான்றுகளுடன் அலசினார். அதில் உள்ள கருத்து வேறுபாடுகளையும் சட்டத்திற்கு புறம்பான அம்சங்களையும் எடுத்துக் கூறினார். இந்தத் தீர்ப்பினால் ஏற்படும் எதிர்கால விளைவுகளையும் எடுத்துரைத்தார். நீதி மன்றம் மீது முஸ்லிம்கள் வைத்திருந்த நம்பிக்கை இந்த தீர்ப்பு தகர்த்துவிட்டதாகவும் கூறினார்.

இதுவரை பாபர் மசூதி விவகாரத்தில் நீதித்துறை 5 முறை எங்களை ஏமாற்றியுள்ளது. கீழ்கோர்ட்டில் உள்ளவர்கள் காவி சிந்தனையுடையவர்காக இருப்பார்கள் மேல்கோர்ட்டில் பார்த்துக் கொள்வோம் என்று பொருமையாக இருந்ததற்க்கு நாங்களும் காவி சிந்தனைவாதிகள் என்று இவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். 17 இலட்சம் வருடங்களுக்கு முன் பிறந்த இராமர் பிறப்பு கண்னுக்கு தெறிந்த நீதிபதிகளுக்கு உலகமே பார்த்துக் கொண்டிருந்த பாபர் மசூதி இடிப்பு கண்னுக்கு தெறியவில்லை, 8700 பக்க தீர்ப்பில் இது குறித்து ஒரு கண்டணம் கூட தெறிவிக்கப்பட வில்லை என்று வேதனை தெறிவித்தார்.

இந்திய முஸ்லிம்களின் அமைதியை பார்த்துவிட்டு தீர்ப்பை ஏற்றுக் கொண்டுவிட்டதாக தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம் நாங்கள் தீர்ப்பை ஏற்கவில்லை என்றும், இந்த அமைதி விரக்தியி்ன் அமைதி என்றும், இந்த அமைதிக்குப் பின்னால் மிகப்பெரிய பிரச்சனையை இந்த நாடு சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இனி எங்களால் எங்கள் மக்களை அமைதிப்படுத்த முடியாது என்றும் அரசாங்கத்திற்க்கு விடும் எச்சரிக்கையாகவே பேசினார்.

கடைசியாக ஒரு வாய்ப்பு நீதித்துறைக்கு வழங்குகிறோம் என்றும், உச்சநீதி மன்றமும் முஸ்லிமகள் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சினால் நாங்களும் கர சேவை செய்ய தயங்கமாட்டோம் என்றும், மிஞசி போனால் துப்பாக்கி சூடு நடத்துவ, அல்லது ஜெயில்ல போடுவியா? போட்டு் விட்டுப் போ... எங்கள் உயிரை கொடுத்தால்தான் நீதி கிடைக்கும் என்ற நிலைக்கு இந்த நாடு எங்களை தள்ளினால் அதற்க்கும் நாங்கள் தயார் என்று கடுமையாக பேசினார்.

அடுத்தகட்டப் போரட்டங்களை அனைத்து சமுதாயத்தினரும் பங்கெடுக்கும் வகையில் இந்த தீர்ப்பு குறித்து மற்ற மக்களுக்கு புரியும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம்களின் பிரச்சனையாக கருதாமல் இதை நாட்டுடைய பிரச்சனையாக எடுத்துச் செல்லவேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்.