பீகார் முதல்வராக இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார் நிதிஷ்குமார்!

24/11/2010 12:48

வரும் வெள்ளிக்கிழமை பீகார் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்கிறார் நிதிஷ்குமார்.

பீகார் மாநிலத்தில், 6 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தற்போதைய ஆளும் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் 141 தொகுதிகளிலும், பா.ஜனதா 102 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

மற்றொரு கூட்டணியில், லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளம் 168 தொகுதிகளிலும், பஸ்வானின் லோக் ஜனசக்தி 75 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 239 தொகுதிகளில் தேர்தலை சந்தித்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க 122 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

பீகாரில் 243 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதலே தற்போதைய முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், அவருடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவும் முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது 176 தொகுதிகளில் முன்னிலை பெற்றும், 26 தொகுதிகளில் வெற்றி பெற்றும் நிதிஷ்குமார் கூட்டணி அனைவரிடமும் பாராட்டு பெற்று வருகிறது. 

 

nakkheeran.in