பெண்களை பர்தா அணியும்படி கட்டாயப்படுத்தக்கூடாது - வங்காளதேச ஐகோர்ட்டு உத்தரவு

24/08/2010 09:01

வங்காளதேச நாட்டில் உள்ள கல்வி நிலையங்களிலும், அலுவலகங்களிலும் பெண்கள் பர்தா அணிந்து தான் வரவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று அந்த நாட்டு ஐகோர்ட்டு உத்திரவிட்டு உள்ளது. 

நேட்டோர் என்ற இடத்தில் உள்ள அரசாங்க பெண்கள் கல்லூரி முதல்வர் மாணவிகள் பர்தா அணிந்து தான் கல்லூரிக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். இதுபற்றிய செய்தி பத்திரிகையொன்றில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ஐகோர்ட்டு இதை வழக்காக ஏற்று விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை ஷம்சுதீன் சவுத்ரி மானிக், ஷேக் முகமது ஜாகீர் உசேன் ஆகிய 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்சு விசாரித்து, "யாரையும் பர்தா அணியும்படி கட்டாயப்படுத்தக்கூடாது'' என்று உத்தரவிட்டது.

வருகிற 26-ந் தேதி நடக்கும் விசாரணையில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்கும்படி கல்லூரி முதல்வருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.