பேராசிரியர் ஜோசப் விவகாரம்: கல்லூரி பதில் மனு

30/10/2010 20:22

கேரளாவில் சர்ச்சைக்குரிய கேள்வித்தாள் தொடர்பாக கல்லூரிப் பணியிலிருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் ஜோசப், தன்னை நீக்கியது செல்லாது என்று பல்கலைக்கழகத் தீர்ப்பாணையத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு பதில் அளித்து நியூமேன் கல்லூரி சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.


பேராசிரியருக்கு எதிராக தங்களிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்றும், அது சரியான முடிவுதான் என்று கல்லூரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 


தன் மீதான புகாரில் எந்தவித விசாரணையும் இன்றி தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், இது அநீதியான நடவடிக்கை என்றும் ஜோசப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவி்ல் கூறப்பட்டிருந்தது.


முன்னதாக, கத்தோலிக்க தேவாலய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நியூமேன் கல்லூரியில் மலையாள மொழி பேராசிரியராக பணியாற்றிவந்த ஜோசப், அவர் தயாரித்த கேள்வித்தாளில் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக கேள்வி ஒன்றை கேட்டிருந்ததாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில், அவரது வலது கையை ஒரு கும்பல் வெட்டி துண்டித்தது.

இச்சம்பவங்களின் எதிரொலியாக, கல்லூரி நிர்வாகம் ஜோசப்பை பணியிலிருந்து நீக்கியது.