மலேசியா லிட்டில் இந்தியா - மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார்
மலேசியாவின் கோலாலம்பூரில் அமைந்துள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் என்ற பகுதி லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இதனை பிரதமர் மன்மோகன் சிங் அக்டோபர் 27ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
இதற்காக 35 கோடி வெள்ளி செலவிலான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. கற்கள் பதித்த சாலைகள், சாலைகளின் இரு புறமும் வண்ண வண்ண தோரணங்கள் மற்றும் குத்து விளக்கு வடிவிலான விளக்கு தூண்கள் என காண்போரின் கண்களை கவரும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மலேசியாவில் மிக உயரமான நீருற்று, கார் பார்க், சாலையோர கடைகள் போன்றவைகளும் இவற்றுள் அடங்கும்.
Webdunia