மீண்டும் பாலியல் சர்ச்சையில் இத்தாலி பிரதமர்

30/10/2010 20:50

 இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி (74) மீண்டும் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த ஆண்டு 18 வயது இளம் பெண்ணுடன் சேர்த்து பெர்லுஸ்கோனி பெயர் கிசுகிசுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை விவாகரத்து செய்வதாக அவரது மனைவி வெரோனிகா லாரியோ அறிவித்தார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் மற்றொரு பெண்ணும் பெர்லஸ்கோனி மீது செக்ஸ் புகார் கூறினார். அடுத்தடுத்து இதுபோன்ற புகார்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில், 3வதாக மீண்டும் அவர் மீது புதிதாக ஒரு செக்ஸ் புகார் முளைத்துள்ளது. மொராக்கோ நாட்டை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் பெர்லுஸ்கோனிக்கு புதிய உறவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர்