மீள் குடியேறும் இலங்கை வடபகுதி முஸ்லிம்கள்

இலங்கையின் வடபகுதிகளில் வாழ்ந்த முஸ்லீம்களை விடுதலைப்புலிகள் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பலவந்தமாக வெளியேற்றி, இந்த மாதத்துடன் இருபது ஆண்டுகள் ஆகின்றன.
முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இலங்கை இராணுவத்திற்கு ஒத்தாசை வழங்கியதாக விடுதலைப்புலிகளால் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தென்னிலங்கையில் தஞ்சமடைந்தனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பு போரில் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இப்படி பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் படிப்படியாக தங்களின் சொந்த இடங்களில் குடியேறிவருகிறார்கள்.
மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளவர்கள், பாழடைந்து போயுள்ள பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றை மறுசீரமைக்க முயற்சித்து வருகின்றனர்.
அண்மையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களுடன் ஒப்பிடு்ம்போது இவர்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சற்று ஒழுங்குபடுத்தப்படாத நிலையே இருப்பதாகவும், தாங்கள் பல சவால்களை சந்திப்பதாகவும் இங்குள்ள ஒரு சிலர் கூறுகின்றனர்.