முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம்

11/01/2012 23:08

 

பாரீஸ் : ப்ரான்சிலிருந்து வெளி வரும் ‘லீ மாண்டே’ எனும் இதழுக்கு பேட்டியளித்த ப்ரான்ஸின் உள்துறை அமைச்சர் கடந்த ஏப்ரலில் முகத்திரை அணிவதற்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்ட பிறகு 237 முஸ்லீம் பெண்கள் முகத்திரை அணிந்தாலும் வெறும் 6 பெண்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண் காவல்துறையினரில் கால்வாசி பெண் காவலர்கள் இஸ்லாத்தை தழுவியது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அமைச்சர் கூறினார். 

இத்தடையானது முஸ்லீம் பெண்களின் மத உரிமையை பறிப்பதாக எதிர்ப்பாளர்களும், ப்ரான்ஸின் மதசார்பின்மையை பாதுகாப்பதாகவும் இஸ்லாமிய தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய கூடியது என்றும் இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர்.


Read more about முகத்திரை அணிந்த பெண்களை விசாரித்த ப்ரான்ஸ் போலீஸார் இஸ்லாத்துக்கு மத மாற்றம் [2048] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com


Create a website for free Webnode