முஸ்லிம் தர்மபரிபாலன சபையின் பொதுக்கூட்டம்

31/07/2010 17:51

 

31.07.2010

நமதூர் முஸ்லிம் தர்மபரிபாலன சபையின் மாதாந்திர பொதுக்கூட்டம் கடந்த 7 மாதங்களுக்கு பிறகு இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் கையெழுத்து வாங்கக் கூடாது என ஜமாஅத் உதவியாளரிடம் தெறிவிக்கப்பட்டிருந்ததால் இது சம்மந்தமாக ஜமாஅத் நிர்வாகிகளிடம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி பின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

1. கடந்த கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் புறக்கணிக்கப் பட்டது சம்மந்தமாக ஒரு கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது. அது சம்மந்தமாக பல மாதங்களாகியும் பதில் அளிக்காத நிலையில் அந்த கடிதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் பின் வக்பு வாரியத்தில் நமதூர் முஸ்லிம் தர்மபரிபாலன சபை சார்பில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது அதில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபையை அச்சுறுத்தும் வகையில் கடிதம் கொடுக்த்துள்ளனர் என புகார் தெறிவிக்கப்பட்டது. அது சம்மந்தமாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் தகவல் அறிந்து வக்பு வாரியத்தை நேரில் தொடர்பு கொண்டு பேசினர், புகார் கொடுக்கப்பட்டுள்ளது உண்மை எனவும் ஆனால் அது சம்மந்தமாக நாங்கள் தலையிட முடியாது என்றும் கூறிவிட்டு, அவர்கள் எங்களை அழைத்திருப்பதால் ஒருநாள் வருவோம் அப்போது நீங்களும் வாருங்கள் பேசிக் கொள்வோம் என்று தெறிவித்துள்ளனர். இந்தக் கடிதம் சம்மந்தமாக விளக்கம் அளிக்குமாறு கேள்வி கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு ”தவ்ஹீத் சம்மந்தமாக எந்தப் பிரச்சனையும் இனிமேல் முஸ்லிம் தர்ம பரிபாலன சபையில் பேசப்படாது” என தீர்மானிக்கப் பட்டுள்ளது. (இந்தத் தீர்மானத்திற்கு பதிலாக தவ்ஹீத் ஜமாஅத்தினரை முஸ்லிம் தர்ம பரிபாலன சபையிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமாய் கோரிக்கை வைக்கப்பட்டது)

2. தற்போதைய தலைவர் சேக் முஹம்மது அவர்கள் கடந்த காலங்களில் ஜமாஅத்தை அவமதித்துப் பேசிய காரணத்தால் ஜமாஅத் கூட்டத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு பிரச்சனை கை கலப்பாகி அடி உதை பட்டு இனிமேல் சேக் முஹம்மதுவுக்கு அவரது கூட்டாளிக்கும் ஜமாஅத்தில் பதவி கொடுக்கக் கூடாது என தீர்மானம் எழுதப்பட்டு இருந்தது. (இது அனைவருக்கும் தெறிந்த சம்பவம்) அது சம்மந்தமாகவும் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பளைய மினிட் நோட்டை கிழித்து அந்த தீர்மானத்தை திருத்தி மீண்டும் ஒட்டப்பட்ட (அதாவது சேக் முஹம்மதுக்கு முஸ்லிம் தர்மபரிபாலன சபையில் எந்தப் பதவியும் கொடுக்கக் கூடாது என்ற தீர்மானத்தை அவர்கள் வசதிக்கு ஏற்ப்ப மாற்றி எழுதிய) நோட்டை காட்டப்பட்டது. அனைவரும் இதற்க்கு எதிராக கருத்து தெறிவிப்பதற்க்கு பதிலாக அவருக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர்.

3. ஜமாஅத் நிர்வாகிகளாக இருப்பவர்கள் தொழக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும், குடி போன்ற அநாகரிகமான செய்யல்களில் ஈடுபடுபவர்களாக இருக்கக் கூடாது என்றும் கடந்த காலங்களில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் முஸலிம் தர்ம பரிபாலன சபை தலைவர் சேக் முஹம்மது குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடந்ததாக செய்தி வந்தது இது சம்மந்தமாகவும் கேள்வி கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு அது போன்ற செய்தி நடக்கவே இல்லை என்று சிலரும் நான்கு மாதங்களுக்கு முன் நடந்ததை ஏன் இப்ப கேட்கிறீர்கள் என்று சிலரும் கூறியுள்ளனர்.

மேற் கூறப்பட்ட (2, 3ல் உள்ள) இரண்டு தீர்மானங்களும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது. சேக் முஹம்மது போன்ற தகுதியற்றவர்கள் நிர்வாகத்தில் இருக்க நாம் தடையாக இருந்த காரணத்தாலும், ஜமாஅத் பணத்தில் வயிறுவளக்க நாம் தடையாக இருப்பதாலும் தவ்ஹீத் ஜமாஅத்தினரை வெளியேற்ற சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக தெறிகிறது.

இதற்க்கு ஜவஹர் அலி அவர்களும் ஒரு புறம் தமுமுக என்றும் மறுபுறம் திமுக என்றும் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு நம்மை எதிர்க்க அவர்களுடன் கை கோர்த்து இருக்கிறார்.

இதில் இயக்க பாகுபாடில்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தை வெளியேற்ற அனைவரும் உடந்தையாக இருக்கின்றனர், நடுநிலையாளர்களும் இதற்கு தலைசாய்த்துள்ளர்.

இவர்களுடைய தனிப்பட்ட பிரச்சனையை தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக (தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத்வல் ஜமாஅத்திற்கும் இடையே உள்ள பிரச்சனையாக) பயன்படுத்த பார்க்கின்றனர். கடந்த காலங்களில் நியாயத்தின் அடிப்படையில், நடுநிலையோடு மட்டுமே நாம் நடந்திருக்கிறோம். கடந்த நிர்வாகத்தை வரை நாங்கள் பிரச்சனையின்றியே சந்தித்திருக்கிறோம். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.

தவ்ஹீத் ஜமாஅத் தனது வணக்க வழிபாடுகளை தவிர மற்ற அனைத்து விசயங்களிலும் முஸ்லிம் தர்ம பரிபாலன சபையை சார்ந்தே இருக்கிறது, இருக்கவும் ஆசைப் படுகிறது. இதற்க்கு வேட்டு வைத்தால் அவர்களால் என்ன செய்ய முடியும் என சிலர் தப்புக் கணக்கு போடுவது போல் தெறிகிறது. மற்ற ஊர்களில் உள்ளது போல் தவ்ஹீத் ஜமாஅத் தனியாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் நலை உள்ளது.

இதற்க்கு ஒற்றுமை பேசுபவர்களும் நடுநிலைவாதிகளும் சந்தோசப் படுகிறார்களே தவிர ஊரின் ஒற்றுமை நிலை கேலிக்கூத்தாக்கப் பட்டுவிடுமே என யாரும் என்னவில்லை. இந்த நிலையைத்தான் தவ்ஹீத் ஜமாஅத் கொடுத்த கடிதம் வாயிலாக எச்சரிக்கப்பட்டது.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசையில் செயல்பட்டு வருகிறது. இதுவரை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளாலோ உறுப்பினர்களாலோ எந்த பிரச்சனையையும் நமது ஊர் சந்தித்ததில்லை. மற்றவர்களை விட அதிகமான உதவிகளும் சமுதாயப் பணிகளும் எந்த பாகுபாடும் இன்றி நமதூர் மக்களுக்காக தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது. அதற்கும் மேலாக எல்லா தகுதியும் உரிமையும் உடையவர்கள் புறக்கணிக்கப் படுவது ஆச்சர்யமாக உள்ளது.