யு.ஏ.இ யில் 14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு

31/08/2010 13:03

14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு யு.ஏ.இ யில் நேற்று திங்கட்கிழமை துபை சேம்பர் ஆப் காமர்ஸ் அன்டு இன்டஸ்ட்ரீஸில்  நடைபெற்றது. அதில் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.

செய்தி: கல்ஃப் நியுஸ், புதுவலசை.இன் இணையதளத்திற்காக அப்துல் ஹலீம்.

முதல் 10 இடங்களைப் பெற்றவர்களின் விபரம்.

1. முஹம்மது எர்சாத் மர்பாய் - 20 அல்ஜீரியா - 2,50,000 திர்ஹம்

2. மஸ்வுத் ரித்வான் -13, வங்கதேசம் - 2,00,000 திர்ஹம்

3. மூஸாப் ஈஸா அலி - 20, பஹ்ரைன் - 1,50,000 திர்ஹம்

4. அஹமது யசூரி முஹம்மது 18, எகிப்த் - 65,000 திர்ஹம்

5. காலிது அபு பாகிர் சலிம் 19, யமன் - 60,000 திர்ஹம்

6. கலீல் இப்ராஹீம் அஹமது 20, லிபியா - 55,000 திர்ஹம்

7. மப்வானா அஸா மப்வானா, 15 - தான்சானியா - 50,000 திர்ஹம்

8. அம்மார் சாலீஹ் அல் தீன் 16, சவுதி அரேபியா - 45,000 திர்ஹம்

9. நாசர் பதிர் முஹம்மது 20, குவைத் - 40,000 திர்ஹம்

10. முஹம்மது அல் அத்ராஸ் 16, மொராக்கோ - 35,000 திர்ஹம்

10. முஹம்மது உதுமான் அப்துல்லாஹ் 18, சூடான் -  35,000 திர்ஹம்

மேலும் 80 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தலா 30,000 திர்ஹம்

70 - 79 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தலா 25,000 திர்ஹம்

70 சதவிகிதத்திற்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா 20,000 திர்ஹம் என வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திவரும் யுஏஇ போட்டியாளர்களும் அரபுலக போட்டியாளர்களும் பின்னுக்கு தள்ளப்பட்டு மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் வெற்றியை தட்டிச் சென்றிருப்பது, இந்தப் போட்டியில் வங்கதேச போட்டியாளர்கள் தொடர்ந்து ஏதேனும் பரிசுகளை வெல்வது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சிறப்பம்சமாக சிறந்த இஸ்லாமியன் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை சூடான் நாட்டைச் சேர்ந்த முன்னால் அதிபர் ஃபீல்டு மார்ஸல் அப்துல் ரஹ்மான் சிவார் அல் தஹப் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமிய உலகத்திற்கு பயன்படுத்தும் விதமாக இவருக்கு 1 மில்லியன் திர்ஹம் பரிசளிக்கப்பட்டது.