ரகசிய தகவல்களை கசியவிட்ட உள்துறை அமைச்சக அதிகாரி கைது

23/11/2010 13:41

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களைக் கசிய விட்டதாக உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரவி இந்தர் சிங் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

 

வடக்கு தில்லி பகுதியில் உள்ள அவரது அலுவலகம், வீட்டில் தில்லி சிறப்பு பிரிவு போலீஸôர் சோதனை மேற்கொண்டனர்.

 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரவி இந்தர் சிங், 1994-ல் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

 

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

 

அமைச்சக ரகசியங்களை கசிய விட்டதான குற்றச்சாட்டை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகச் செயலாளர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.

 

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை சில தனியார் நிறுவனங்களுக்கு அளித்தாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

 

உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கிருந்த ஒரு அதிகாரியே ரகசிய தகவல்களை கசிய விட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dinamani.com