ரமளானை வரவேற்போம் - தெருமுனைப் பிரச்சாரம்
பின் ரமளானை வரவேற்போம் என்ற தலைப்பில் சகோதர் சதக்கத்துல்லாஹ் கான் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அவரது உரையில் இரவுத் தொழுகை, லைலத் கத்ர், திருக்குர்ஆனின் சிறப்புகள் பற்றியும் குர்ஆனை தினமும் ஒதேவேண்டும் எனவும், அதன் விளக்கங்களை தமிழில் தெறிந்து கொள்ளவேண்டும் எனவும், குர்ஆன் ஹதீஸை மட்டுமே நாம் பின்பற்றி வாழவேண்டும் எனவும் வழியுறுத்தினார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத எதுவும் மார்க்கம் இல்லை அதை பின்பற்றக் கூடாது எனவும் அப்படி பின்பற்றும் பட்சத்தில் அது பித்அத் (அனாச்சாரம்) ஆகும் எனவும் வழிகேடு எனவும் எடுத்துரைத்ததோடு தராவீஹ் தொழுகை 20 ரக்கஅத் தொழ வேண்டும் என்பதற்கான எந்த ஆதாரப்பூர்வமான செய்திகளும் இல்லை எனவும் தெளிவாக எடுத்துரைத்தார்.
அதன் பின் சகோதரர் நியாஸ் அஹமது அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். அதில் வட்டியில்லா கடன் உதவி பற்றியும், அதற்காக வசதி படைத்தவர்கள் உதவுமாறும் கேட்டுகொண்டார். பின் துஆவுடன் கூட்டம் நிறைவேறியது. முன்னதாக ரமளான் சம்மந்தமான நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அல்ஹம்துலில்லாஹ்